பலமுறை முயற்சி செய்தும் வட்டி விகிதத்தை உயர்த்த முடியாத அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் டொனால்டு டிரம்ப் வெற்றிக்குப் பின் அவரது திட்டங்கள் அமெரிக்காவில் பணவீக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், 13ஆம் தேதி துவங்கிய நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
புதன்கிழமை இக்கூட்டத்தின் முடிவில் பெடரல் ரிசர்வ்-இன் தலைவரான ஜெனென்ட் யெலன் வட்டி விகிதத்தை உயர்த்தியதைக் குறித்துச் செய்தியை வெளியிட்டார்.
இந்த வட்டி உயர்வால் சர்வதேச பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்..?
வட்டியில் மாற்றம்
2016ஆம் ஆண்டில் முதல் முறையாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா, வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதத்தில் இருந்து 0.75 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
இந்த 0.25 சதவீத உயர்வு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சந்தையின் ஸ்திர தன்மையைக் காட்டுவது மட்டும் அல்லாமல் பணவீக்க உயரும் என்பதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறது.
இந்திய சந்தை
அமெரிக்கச் சந்தையில் வட்டி உயர்வு குறித்த சாதகமான வாய்ப்புகள் உருவானபோதே, இந்திய சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீடு வெளியேறியதை நாம் பார்த்தோம்.
இந்நிலையில் புதன்கிழமை அறிவிப்பு வெளியான நிலையில் வியாழக்கிழமை இந்திய சந்தையில் மந்தமான வர்த்தகம் பதிவானது.
ஜிடிபி உயர்வு
அமெரிக்கப் பெடரல் வங்கியின் இந்த வட்டி உயரிவின் மூலம் இந்நாட்டின் ஜிடிபி 2017ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாகவும், 2018ஆம் ஆண்டில் 2 சதவீதமாகவும், 2019ஆம் ஆண்டில் 1.9 சதவீதமாக உயரும் எனக் கணித்துள்ளது.
இந்நிலையில் இந்த அளவீடுகள் இந்தியா, சீனா, போன்ற வளரும் நாடுகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.
டாலர் மதிப்புகள்
பெடரல் ரிசர்வின் இந்த வட்டி உயர்வின் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவீடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது.
இதனால் உலகளவில் நாணய பரிமாற்றத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் அமெரிக்க டாலர் மேலும் வலிமை அடையும். இதன் வாயிலான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications