மக்களுக்கு கிடைக்காதது, இவங்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது.. செக் வைத்தது வருமான வரித்துறை..!

ஒரு பக்கம் வருமான வரி துறையினர் கருப்பு பணத்தைப் பதுக்குபவர்களை பிடித்தும் வருகின்றனர். இப்படி கருப்பு பணத்தைப் பதுக்க ஆக்ஸிஸ் வங்கி ஊழியர்கள் சிலர் உதவி செய்து சிக்கியதும் நாடு முழுவதும் பரபரப்பாக்க

நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டார்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டதற்கான காரணமாக முதலில் கள்ள பணத்தை அழிப்பது என்று கூறிவிட்டு, பின்னர் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர என்று கூறிவிட்டு இப்போது அனைவரையும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என்று தினம் ஒரு சிக்கலை மக்களுக்கு ஏற்படுத்திவருவது தான்.

அதே நேரம் ஒரு பக்கம் வருமான வரி துறையினர் கருப்பு பணத்தைப் பதுக்குபவர்களை பிடித்தும் வருகின்றனர். இப்படி கருப்பு பணத்தைப் பதுக்க ஆக்ஸிஸ் வங்கி ஊழியர்கள் சிலர் உதவி செய்து சிக்கியதும் நாடு முழுவதும் பரபரப்பாக்க பேசப்பட்டது.

இங்கு நாங்கள் சென்ற ஒரு மாதத்தில் பெறும் நகரங்களில் மட்டும் வருமான துறையினர் எவ்வளவு கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளை கருப்பப் பணமாக பரிமுதல் செய்துள்ளனர் என்று இங்குப் பார்ப்போம்.

டெல்லி

டெல்லி

புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட இரண்டாவது நாளே இரண்டு தனிப்பட்ட நபர்கள் 3.5 கோடி ரூபாய் புதிய நோட்டுகளை வைத்திருந்தாக கைதுசெய்யப்பட்டனர்.

டெல்லியில், கிரேட்டர் கைலாஷ்-I வட்டத்தில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தில் மட்டும் புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் என 8 கோடி ரூபாய் காவல் துறை நடத்திய ரோந்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

 

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகா மற்றுன் கோவாவில் வருமான வரி துறையினர் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆம் தேதி நடத்திய சோதனையில் புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் என 6 கோடி ரூபாயும், அதில் புதிய ரூபாய் நோட்டுகள் மட்டும் 4.7 கோடி ரூபாய் என்று கூறப்படுகின்றது.

மேலும் ஹூப்ளி மற்றும் சித்தரதுர்கா மாவட்டத்தில் 5.7 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் கருப்புப் பணமாக 90 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளும், 32 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.

 

சென்னை மற்றும் வேலூர்

சென்னை மற்றும் வேலூர்

சென்னையில் டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித்துறையினர் செய்த மிகப்பெரிய ரெய்டில் 90 கோடிகள் சிக்கியது. அதில் 70 கோடி புதிய ரூபாய் நோட்டுகள்.

இதேப் போன்று வேலூரில் டிசம்பர் 9 ஆம் தேதி கார் ஒன்றை மடக்கி சோதனை செய்ததில் 24 கோடி 12 பெட்டிகளில் அடைக்கப்பட்டுக் கடத்தியதை பிடித்தனர். இதில் இருந்த மொத்த பணமும் 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே.

 

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

டிசம்பர் 6 ஆம் தேதி பஜக தலைவர் மகேஷ் சர்மா மேற்கு வங்கத்தில் 33 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டார்.

குஜராத்

குஜராத்

குஜராத்தில் உள்ள சூரத்தில் டிசம்பர் 9-ம் தேதி வருமான வரி துறையினர் செய்த சோதனையில் 1.57 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவா

கோவா

டிசம்பர் 7-ம் தேதி கோவாவில் சிபிஐ மற்றும் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 1.5 கோடிகள் புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

டிசம்பர் 10-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாராவில் 7,20,000 ரூபாய் புதிய நோட்டுகளை வருமான வரி துறையினர் கைப்பற்றினர்.

இதில் மேலும் பல ரூபாய் நோட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டது எல்லாம் குறிப்பிடப்படவில்லை. இந்தியாகரன்ஸி.இன் என்ற இணையதளத்தில் இருந்து மட்டும் உங்களுக்காகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+