நாணய கொள்கை மட்டுமல்ல ரிசர்வ் வங்கியிலும் பல மாற்றங்கள்..!

2016ஆம் ஆண்டுத் துவங்கி சில மாதங்கள் மட்டுமே ஆனது என்ற வகையில் இருந்தாலும் வருத்தின் முடிவை நாம் அனைவரும் அடைந்துவிட்டோம்.

இந்த வருடம் இந்திய பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இதனை ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையின் மூலம் எப்படி எல்லாம் சமாளித்து.

அட மத்திய அரசு, ரிசர்வ் வங்கியைச் சமாளித்தே தனிக் கதை. இதற்குக் காரணம் ராகுராம் ராஜன் வெளியேற்றம் மற்றும் புதிய தலைவரான உர்ஜித் பட்டேல் நியமனம் சந்தையில் மிகப்பெரிய மாற்றமாக உள்ளது.

பிப்ரவரி 02, 2016

பிப்ரவரி 02, 2016

2015-16ஆம் நிதியாண்டின் 6வது இருமாத நாணய கொள்கை 2016ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 02ஆம் தேதி முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்றது.

2015-16ஆம் ஆண்டின் கடைசிக் காலகட்டத்தில் நாட்டின் மைக்ரோ பொருளாதாரப் பிரச்சனையின் காரணமாக வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை. இதன் படி..

ரெப்போ ரேட் - 6.75%
ரிவர்ஸ் ரெப்போ ரேட் - 5.75%
பண இருப்பு அளவீடு- 4.0%
எம்எஸ்எப்- 7.75%

 

ஏப்ரல் 05, 2016

ஏப்ரல் 05, 2016

இது 2016-17ஆம் நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டமாக இருந்தாலும், 2016ஆம் ஆண்டின் 2வது இருமாத நாணய கொள்கை மறுஆய்வு கூட்டம் ராஜன் தலைமையில் ஏப்ரல் 05, 2016 தேதி நடந்தது.

இக்காலகட்டத்தில் உலக நாடுகளின் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் இந்தியாவில் மோசமான வர்த்தக நிலையைச் சந்தித்தது, இதன் வாயிலாக ஏற்றுமதியில் சரிவு, இறக்குமதி உயர்வால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்தது. இதன் வாயிலாக நாட்டின் வளர்ச்சி குறைந்தது மட்டும் அல்லாமல் பணவீக்கமும் உயரத் துவங்கியது.

இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை மாற்ற முடிவு செய்தது. இதன் படி

ரெப்போ ரேட் - 6.5% (0.25% குறைப்பு)
ரிவர்ஸ் ரெப்போ ரேட் - 6.0% (0.25% உயர்த்தப்பட்டது)
பண இருப்பு அளவீடு- 4.0%
எம்எஸ்எப்- 7.0% (0.75% குறைப்பு)

 

ஜூன் 7, 2016

ஜூன் 7, 2016

நாட்டின் பணவீக்க உயர்வு குறைத்து கடந்த நாணய கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் வட்டியை குறைந்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஜூன் 7, 2016 தேதி நடந்த கூட்டத்தில் எவ்விதமான மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. இதன் படி

ரெப்போ ரேட் - 6.5%
ரிவர்ஸ் ரெப்போ ரேட் - 6.0%
பண இருப்பு அளவீடு- 4.0%
எம்எஸ்எப்- 7.0%

 

ஆகஸ்ட் 09, 2016

ஆகஸ்ட் 09, 2016

அமெரிக்கச் சந்தையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற்றம் ஆகியவை இந்திய சந்தையின் நிதிநிலையைப் பாதித்தது. இதனால் நாட்டின் பணவீக்க அளவுகளைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களின் மாற்றங்களை அறிவிக்கும் முடிவைக் கைவிட்டது. இதன் படி

ரெப்போ ரேட் - 6.5%
ரிவர்ஸ் ரெப்போ ரேட் - 6.0%
பண இருப்பு அளவீடு- 4.0%
எம்எஸ்எப்- 7.0%

 

அக்டோபர் 04, 2016

அக்டோபர் 04, 2016

செப்டம்பர் 4ஆம் தேதியுடன் ராகுராம் ராஜனின் பணிக்காலம் முடிந்தது. பணி நீட்டிப்பை மறுத்த ராஜன் ரிசர்வ் வங்கி பொறுப்பில் இருந்தும் மட்டும் அல்ல நாட்டை விட்டே வெளியேறினார். இதன் பின் புதிய கவர்னராக மத்திய அரசு உர்ஜித் பட்டேல் அவர்களை நியமனம் செய்தது.

உர்ஜித் பட்டேல் நியமனத்திற்குப் பின் நாணய கொள்கை அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த மூவரும், மத்திய அரசைச் சேர்ந்த மூவரும் இடம்பெறுவார்கள். இந்த அமைப்பிற்குக் கவர்னர் தலைமை வகிப்பார்.

இந்தப் புதிய அமைப்பின் கீழ் நடத்தப்பட்ட முதல் இருமாத நாணய கொள்கை கூட்டம் அக்டோபர் 04, 2016 தேதி நடந்தது. இக்காலகட்டத்தில் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 5 சதவீதமாகக் குறைந்த நிலையில் வட்டி விகிதத்தைக் குறைக்க உர்ஜித் பட்டேல் தலைமையிலான நாணய கொள்கை அமைப்பு முடிவு செய்தது. இதன் படி

ரெப்போ ரேட் - 6.25% (0.25% குறைப்பு)
ரிவர்ஸ் ரெப்போ ரேட் - 5.75% (0.25% குறைப்பு)
பண இருப்பு அளவீடு- 4.0%
எம்எஸ்எப்- 6.75% (0.25% குறைப்பு)

 

டிசம்பர் 07, 2016

டிசம்பர் 07, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி, இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை ஆகியவை நாட்டின் வளர்ச்சி அளவுகளை அதிகளவில் பாதிக்கும் சூழ்நிலை உருவானது. இதன் படி உர்ஜித் பட்டேல் தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை அமைப்பு வட்டி விகிதத்தை மாற்றவில்லை. இதன் படி

ரெப்போ ரேட் - 6.25%
ரிவர்ஸ் ரெப்போ ரேட் - 5.75%
பண இருப்பு அளவீடு- 4.0%
எம்எஸ்எப்- 6.75%

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+