பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்கள் தயார் என்றால் அரசு தயாராக இருக்கிறதா..?

பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மக்கள் மாறுவது காலத்தின் கட்டாயம். மாறுவது பல நன்மைகள் அளிக்கும்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வாரங்களாக மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் முழங்கி வரும் நிலையில் இதற்கு விளம்பரம் செய்து வருகின்றது.

பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மக்கள் மாறுவது காலத்தின் கட்டாயம். மாறுவது பல நன்மைகள் அளிக்கும். பணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றால் அது திருடு போகும் போன்ற கவலைகள் உண்டு.

டிஜிட்டல் முறை பரிவர்த்தனை என்றால் பணமில்லாமல் இருந்த இடத்தில் இருந்தே பணத்தை பிறருக்கு அனுப்பலாம், பணம் இல்லாமல் செலவு செய்யலாம்.

இது நகரத்தில் உள்ள மக்களுக்குச் சாத்தியம், கிராமங்களில் உள்ள மக்களுக்கு. இங்குச் சாத்தியம் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று இங்குப் பார்ப்போம்.

தடையில்லா மின்சாரம்

தடையில்லா மின்சாரம்

பணமில்லா பரிவர்த்தனைக்கு முதலில் மக்கள் தயாரானாலும் குக் கிராமம் முதல் பெரும் நகரம் வரை தடை இல்லாமல் மின்சாரம் அளிக்க அரசால் முடியுமா?

இணையம்

இணையம்

தடையில்லா மின்சாரத்தை அரசு அளிக்க முடியும் என்றால் தடையில்லா இணைய இணைப்பை அளிக்க முடியுமா? மின்சாரத்தையும், இணைய இனைப்பையும் இலவசமாக அளிக்க முடியுமா? சரி, இணைய இணைப்பைக் காசு கொடுத்து மக்கள் பெற்றுக்கொள்ள தயாரானாலும் அவர்களுக்கு இந்தச் சேவையை மத்திய அரசு எந்த நிலையில் அளித்து வருகின்றது.

இன்று வரை 26 சதவீத இந்தியர்களே இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப் பட்ட சூழலில் பணமில்லா பரிவர்த்தனை எப்படி சாத்தியம்?

 

போக்குவரத்து

போக்குவரத்து

பேருந்தில் செல்கிறோம் என்றால் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பெற இயலுமா?

அரசு டிஜிட்டல் முறையில் இயங்குகிறதா?

அரசு டிஜிட்டல் முறையில் இயங்குகிறதா?

மத்திய அரசும், மாநில அரசும் பல சேவைகளை இன்னும் டிஜிட்டல் முறையில் கொண்டு வரவில்லை. இதற்கு அரசு என்ன செய்து வருகின்றது.

படிப்பறிவில்லா மக்களுக்குப் பயிற்சி

படிப்பறிவில்லா மக்களுக்குப் பயிற்சி

பனமில்லா பரிவர்த்தனை குறித்து படிப்பறிவில்லா மக்களுக்குப் பயிற்சி அளிக்க அரசு தயார் ஆக வேண்டும். அதுவரை மக்கள் இதை எதிர்க்கத் தான் செய்வார்கள்.

மக்களுக்குப் பயம் வேண்டாம்

மக்களுக்குப் பயம் வேண்டாம்

மக்கள் டிஜிட்டல் திருட்டு போன்றவற்றைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை. அதே நேரம் உங்கள் கணக்கு வழக்குகளை நீங்கள் சரியாக வைத்துக்கொள்ள வேண்டி வரும். அதற்காக வரி செலுத்த நேரிடும். நீங்கள் வரி செலுத்துவதினால் மேலும் பல வளர்ச்சி திட்டம் உங்களை வைந்து சேரும் என்று நம்ப வேண்டும்.

கருப்புப் பணத்தை ஒழிப்போம்

கருப்புப் பணத்தை ஒழிப்போம்

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அனைத்துக் கணக்கு வழக்குகளும் கணக்கில் வர வேண்டும். அதற்கு பணமில்லா பரிவர்த்தனை கண்டிப்பாக உதவும். ஆனால் மக்களுக்குப் பெறும் பிரிச்சனையாக உள்ள மின்சாரம், இணையம் போன்றவற்றை குக்கிராம வரை அளித்து அவர்களுக்குப் பயிற்சியும் அளித்து மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக கருப்புப் பணத்திற்கு எதிரான பணமில்லா இந்தியா சாத்தியமே!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cashless economy: Govt prepared for it or not

If people ready for cashless economy, Gvot prepared for it or not
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X