வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அறங்காவலர்கள் வாரியம் ஆகியோர் இணைந்து 2015-2016 நிதி ஆண்டிற்கு 8.8 சதவீதமாக இருந்த வட்டியை 8.65 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2015-2016 நிதி ஆண்டிற்கு 8.8 சதவீதமாக இருந்த பிஎப் மீதான வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாகக் குறைத்தது.

இதற்கான முடிவை வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அறங்காவலர்கள் வாரியம் ஆகியோர் இணைந்து 2015-2016 நிதி ஆண்டிற்கு 8.8 சதவீதமாக இருந்த வட்டியை 8.65 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளதாக இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் துணைத் தலைவர் அசோக் சிங் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த வட்டி குறைப்பினை பாரதிய மஸ்தூர் சங்கம் பொதுச் செயலாளர் பிரிஜேஷ் உபாத்யாய் உறுதி செய்துள்ளார்.
முதலில் 8.8 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 8.7 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது, இதனால் 69.34 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் 8.65 சதவீதமாகக் குறைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நடப்பு நிதி ஆண்டில் 39,084 கோடி ரூபாய் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு வருவாயாக அமைந்துள்ளது.
மேலும் இதேப் போன்று சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் வட்டியைக் குறைக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதம் பிபிஎப், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி திட்டம் போன்றவற்றின் வட்டியை 0.1 சதவீதம் குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் தொழிலாளர் அமைச்சகம் 8.8 சதவீத வட்டி விகிதமே தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று விரும்புவதாக நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications