புத்தாண்டு சலுகையாக 917 ரூபாய்க்கு விமான கட்டணத்தை அறிவித்தது ஏர் ஏசியா..!

ஏர் ஏசியாவின் இந்தத் தள்ளுபடி விலையில் 2017, மார்ச் 1 முதல் 2017, அக்டோபர் வரையிலான பயணங்களுக்கு, 2017, ஜனவரி 1 வரை டிக்கெட்கள் புக் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் பட்ஜெட் விமான சேவையை அளித்து வரும் ஏர் ஏசியா நிறுவனம் புத்தாண்டு சலுகையாக 917 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.

ஏர் ஏசியாவின் இந்தத் தள்ளுபடி விலையில் 2017, மார்ச் 1 முதல் 2017, அக்டோபர் வரையிலான பயணங்களுக்கு, 2017, ஜனவரி 1 வரை டிக்கெட்கள் புக் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

917 ரூபாய் ஆஃபர்

917 ரூபாய் ஆஃபர்

பெங்களூர்-கொச்சி, பெங்களூர்- கோவா மற்றும் பெங்களூர்-ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு 917 ரூபாயில் டிக்கெட்கள் கிடைக்கும்.

டெல்லி-கோவா செல்ல 2.917 ரூபாய் எனவும், டெல்லி பெங்களூர் போன்ற வழித்தடங்களுக்கு 2,217 ரூபாய் எனவும் புத்தாண்டு சலுகை ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

 

ஏர் ஏசியா இந்தியா விமான சேவை

ஏர் ஏசியா இந்தியா விமான சேவை

ஏர் ஏசியா இந்தியா இப்போது 11 இடங்களுக்கு பெங்களுர் மற்றும் டெல்லி ஹப்களில் இருந்து சண்டிகர், ஜெய்ப்பூர், கவுஹாத்தி, இம்பால், பூனே, கோவா, விசாக், கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவையை அளிக்கிறது.

பிற வழித்தடங்களில் ஆஃபர்

பிற வழித்தடங்களில் ஆஃபர்

ஏர் ஏசியாவின் இந்த ஆஃபரில் பெங்களூரில் இருந்து கவுஹாத்தி செல்ல 2,217 ரூபாய் எனவும், பெங்களூரில் இருந்து சண்டிகர் செல்ல 2,917 ரூபாய் எனவும், பெங்களூரில் இருந்து ஜெய்ப்பூர் செல்ல 2,917 ரூபாய் எனவும், பெங்களூரில் இருந்து விசாகப்பட்டிணம் செல்ல 1,417 ரூபாய் எனவும் விமான டிக்கெட்களில் சலுகையை அறிவித்துள்ளது.

எத்தனை டிக்கெட்டுகள்

எத்தனை டிக்கெட்டுகள்

ஏர் ஏசியா இந்தியா இந்த 917 ரூபாய் சலுகை விலையில் எத்தனை டிக்கெட்கள் கிடைக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடவில்லை.

கோஏர்

கோஏர்

ஏர் ஏசியாவை போன்று குறிப்பிட்ட வழித்தடங்களில் 1,057 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது கோஏர். கோஏரின் இந்த சலுகை விலையில் டிசம்பர் 31 வரை டிக்கெட்கள் புக் செய்ய இயலும்.

கோஏர் ஆஃபர் அளித்துள்ள வழித்தடங்கள்

கோஏர் ஆஃபர் அளித்துள்ள வழித்தடங்கள்

டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்ல 1,057 ரூபாய் எனவும், மேலும் சில வழித்தடங்களுக்கு 2,889 ரூபாய் எனவும் கோஏர் இணையதளத்தில் ஆஃபர் விலையில் டிக்கெட்களை குறிப்பிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+