5000 ரூபாய்க்கு அதிகமாக ஒரு முறை டெப்பாசிட் செய்யும் போது கேள்வி கேட்கப்படாது: அருண் ஜெட்லி

அருண் ஜேட்லி மக்களிடம் தேங்கி நிற்கும் பணத்தை ஒரே நேரத்தில் வங்கியில் டெப்பாசிட் செய்தால் கேள்விகள் கேட்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெப்பாசிட் செய்ய புதிய விதிகள் திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த அருண் ஜேட்லி மக்களிடம் தேங்கி நிற்கும் பணத்தை ஒரே நேரத்தில் வங்கியில் டெப்பாசிட் செய்தால் கேள்விகள் கேட்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

13 லட்சம் கோடி திரும்பப்பெறப்பட்டுள்ளது

13 லட்சம் கோடி திரும்பப்பெறப்பட்டுள்ளது

பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களாகப் புழக்கத்தில் இருந்த 15.4 லட்சம் கோடி ரூபாயில் 13 லட்சம் கோடி வங்கிகள் மூலமாகத் திரும்பப்பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை வங்கிகளில் முதலீடு செய்யவும் அங்கு ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் டிசம்பர் 30-ம் தேதி வரை டெப்பாசிட் செய்பவர்கள் 5000 ரூபாய்க்கும் அதிகமாக ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் விளக்கம்

நிதி அமைச்சர் விளக்கம்

இந்த முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ள நிதி அமைச்சர் செல்லாது என்று அறிவித்துள்ள பழைய ரூபாய் நோட்டுகளுக்கு மட்டுமே இந்த விதி என்றும் பிற ரூபாய் நோட்டுகளை டெப்பாசிட் செய்ய எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்று கூறியுள்ளார்.

சென்ற வாரம் முதல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளைத் தவிர வேறு எங்கும் மாற்ற முடியாது என்ற நிலை இப்போது உள்ளது.

 

கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம்

கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம்

இதனால் வங்கிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் ஒரே தவணையாக மொத்த பணத்தையும் வங்கிகளில் டெப்பாசிட் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த முறை நடைமுறைப்படுத்தப் படுவதாகவும், தினமும் வங்கிகளில் வந்து பழைய ரூபாய் நோட்டுகளை டெப்பாசிட் செய்வதை இன்னும் வேகமாக முடிக்க இயலும் என்று கூறுகின்றார்.

விளக்கம் எப்போது அளிக்க வேண்டும்

விளக்கம் எப்போது அளிக்க வேண்டும்

ஒரே நபர் தினமும் வங்கிக்குச் சென்று பழைய ரூபாய் நோட்டுகளைப் பெறும் அளவில் டெப்பாசிட் செய்யும் போது கேள்வி கேட்கப்படும் என்றும் இது அவருக்கு இந்த பெறும் தொகை எப்படி வந்தது என்பதற்காக மட்டும் தான் அதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதற்குத் தக்க விளக்கம் அளித்தால் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

பயம் வேண்டாம்

பயம் வேண்டாம்

இதற்காக மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, வங்கிகளில் தாராலமாக முதலீடு செய்யலாம் என்றும் அருன் ஜேட்லி கூறினார்.

மேலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களை அதிக அளவில் வருமானமாகப் பெற வாய்ப்பு இல்லை என்று, 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொகை வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ளார்.

 

பிரதான் மந்திரி கிரகக் கல்யாண் யோஜனா

பிரதான் மந்திரி கிரகக் கல்யாண் யோஜனா

எனினும் கருப்பப் பணமாக வைத்துள்ளவர்கள் பிரதான் மந்திரி கிரகக் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் சமர்ப்பித்து, அபராதத்தைச் செலுத்திவிட்டு மீதத் தொகையை 4 வருடங்களுக்குள் மொத்தமாகப் பெற்று வெள்ளையாக்கிக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+