முன்பதிவு டிக்கெட்களுக்கு ஃப்ளெக்ஸி கட்டணம் முறையை அமல்படுத்த முயன்று வருகிறது. இதன் முதல் தொடக்கமாக பிரீமியம் ரயில்களில் சோதனை செய்யப்பட்டது.
இந்திய ரயில்வே நிறிவாகம் சென்ற சில மாதங்களாக முன்பதிவு டிக்கெட்களுக்கு ஃப்ளெக்ஸி கட்டணம் முறையை அமல்படுத்த முயன்று வருகிறது. இதன் முதல் தொடக்கமாக பிரீமியம் ரயில்களில் சோதனை செய்யப்பட்டது.
பீரிமியம் ரயில்கள்
இப்போது அதே முறையை ராஜ்தானி, சதாப்தி போன்ற பீரிமியம் ரயில்களிலும் அறிவிக்க உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தட்கல் டிக்கெட் முறையும் ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் இருந்து நீக்கப்படுகின்றது.
ப்ளெக்ஸி கட்டணம்
இந்த ப்ளெக்ஸி கட்டணம் முறையினால் ரயில் பயணிகளை கடைசி நிமிடம் வரை கவர இயலும் என்றும் இதனால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
சோதனை
ப்ளெக்ஸி கட்டணம் முறையை ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதன் மூலம் ரயில் புறப்படும் நாள் மற்றும் நேரத்தைப் பொருத்து 10 முதல் 50 சதவீதம் வரை டிக்கெட் கட்டணங்கள் உயரும் . இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 500 கோடி வரை வருமான ரயில்வேவுக்குக் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.
அடிப்படை கட்டண உயரும்
இந்த ப்ளெக்ஸி கட்டணம் 10 முதல் 50 சதவீதம் வரை அடிப்படை கட்டணத்தில் இருந்து மட்டுமே உயரும். அதே நேரம் முன்பு இருந்ததைப் போன்று முன்பதிவு கட்டணம், சேவை வரி போன்றவற்றை செலுத்த வேண்டும் என்றும் 2016 டிசம்பர் 20-ம் தேதி முதல் ஆறு மாதம் வரை இந்த முறை சோதனை முறையில் அமலுக்கு வருகின்றது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பீரிமியம் ரயில்களின் தற்போதைய நிலை
செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை அறிவித்த இந்த ப்ளெக்ஸி கட்டண முறையினால் 5,871 சீட்டுகள் காலியாக இந்த ரயில்கள் பயணித்து தோல்வியைச் சந்தித்து உள்ளதை அடுத்து இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளது.
தட்கல் முறை நீக்கம்
ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் தட்கல் முறை நீக்கப்பட்டுள்ளதாகல் 10 சதவீதம் வரை பயணிகள் ரயில் கட்டணங்களில் இருந்து சேமிக்க முடியும். ஆனால் 10 முதல் 50 சதவீதம் வரை டிக்கெட் விலை ப்ளெக்ஸி கட்டண முறையினால் உயரும்.
ஆனால் மண்டல அலுவலகங்களில் தட்கல் முறை நீக்கம் குறித்து ஆலோசித்த பிறகு 30 சதவீதம் வரை தட்கல் டிக்கெட் முறைக்கு ஒதுக்கப்படலாம் என்றும் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications