இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சலுகை விலையில் டிக்கெட்களை அறிவித்துள்ளது.
பட்ஜெட் விமான போக்குவரத்து சேவை அளித்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சலுகை விலையில் டிக்கெட்களை அறிவித்துள்ளது. இண்டிகோ அறிவித்துள்ள இந்தச் சலுகை விலையின் மூலம் 999 ரூபாயில் விமான பயணம் செய்யலாம்.
ஆஃபர் காலம்
2017 ஜனவரி 9-ம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை பயணம் செய்வதற்கான விமான டிக்கெட்களை 999 சலுகை விலையில் பெறலாம் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் எத்தனை டிக்கெட்கள் இந்தச் சலுகை விலையில் கிடைக்கும் என்று ஏதும் கூறப்படவில்லை.
அஃபர் உள்ள வழித்தடங்கள்
999 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் செல்லலாம். மேலும் ஜெய்ப்பூரில் இருந்து பூனே செல்ல 2,317 ரூபாய் டிக்கெட் கட்டணம் என்றும், டெல்லியில் இருந்து கவூஹாத்தி செல்ல 2,417 ரூபாய் எனவும் டெல்லியில் இருந்து பெங்களூரு செல்ல 2,534 ரூபாய் எனவும், டெல்லியில் இருந்து கோவா செல்ல 3,116 ரூபாய் எனவும் ஆஃபர்கள் அறிவித்துள்ளது இண்டிகோ.
ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் இதேப் போன்று 990 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த ஆஃபர் விலையில் 2017, ஜனவரி 4 முதல் மார்ச் 1-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.
இதற்கான டிக்கெட்கள் டிசம்பர் 20 முதல் 23-ம் தேதிவரை இணையதளத்தில் கிடைக்கும்.
ஏர் ஏசியா
இதேப் போன்று ஏர் ஏசிய நிறுவனம் 917 ரூபாய்க்குப் புத்தாண்டு சலுகையாகவும் விலையைக் குறைத்து அறிவித்துள்ளது. 2017 மார்ச் 1-தேதி முதல் அக்டோபர் 31 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 2017 ஜனவர் 1-ம் தேதி வரை ஆஃபர் விலையில் ஏர் ஏசியா இணையதளத்தில் பெறலாம்.
கோஏர் ஆஃபர்
குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் கோஏர் விமான போக்குவரத்து சேவை நிறுவனமும் 1057 ரூபாய் முதல் 2889 ரூபாய் வரை ஆஃபர் விலையில் டிக்கெட் கட்டணத்தை அறிவித்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications