கிறிஸ்துமஸ் சலுகையாக கோர் விமான போக்குவரத்து நிறுவனம் 999 ரூபாயில் விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை அளித்து வரும் நிறுவனங்கள் தொடர்ந்து சலுகை விலையில் டிக்கெட்களை அறிவித்து வருகின்றன.
இப்போது கிறிஸ்துமஸ் சலுகையாக கோர் விமான போக்குவரத்து நிறுவனம் 999 ரூபாயில் விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் சலுகை
கிறிஸ்துமஸ் சலுகையின் மூலமக கோஏர் விமான போக்குவரத்து சேவையில் 23 வழித்தடங்களில் குறைந்த கட்டணமான 999 ரூபாயில் பயணம் செய்யலாம்.
சலுகை காலம்
2017 ஜனவரி 9 முதல் ஏப்ரல் 15 வரையிலான பயணங்களுக்கு கோஏர் கிறிஸ்துமஸ் சலுகை விலையில் டிக்கெட்களை டிசம்பர் 31-ம் தேதி வரை புக் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
விடுமுறை திட்டம்
கோஏர் நிறுவனம் இந்த சலுகை விலையில் டிக்கெட்களை தொடர் விடுமுறை வரும் நேரத்தில் விமான பயணிகளை கவரவே விடுமுறை திட்டத்தை அறிவித்துள்ளது.
டிக்கெட்கள் எங்கு கிடைக்கும்
999 ரூபாய் விமான டிக்கெட்கள் கோஏர் இணையதளம், கோஏர் டிக்கெட் கவுண்ட்டர் மற்றும் கோஏர் வாடிக்கையாளர் அழைப்பு சேவை மையங்கள் மற்றும் கோஏர் ஏஜெண்டுகளிடம் இருந்தும் பெறலாம்.
மேலும் முதலில் வருவோருக்கே இந்த சலுகை விலையில் முன்னுரிமை என்றும் குறைந்த டிக்கெட்கள் மட்டுமே இந்த சலுகை விலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications