இப்போது உள்ள தொழிலாளர்களுக்கான ஊதிய சட்டத்தின் படி ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களாகச் சம்பளம் பெறலாம்.
தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் ஊதிய சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்த மோடியின் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் காசோலை அல்லது பிற மின்னணு படிவர்தனை மூலம் மட்டுமே தொழிலாளர்களால் சம்பளம் பெற இயலும்.
இப்போது உள்ள தொழிலாளர்களுக்கான ஊதிய சட்டத்தின் படி ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களாகச் சம்பளம் பெறலாம். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை டெல்லியில் புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் பின் வரும் திருத்தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இங்கு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் ஊதிய சட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய திருத்தங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
காசோலை பரிவர்த்தனை
நிறுவனங்கள் ஊழியர்களுக்குக் காசோலையாக சம்பளத்தை அளிக்கலாம். ஆனால் பணமாகவோ அல்லது நாணயமாக அளிக்கக் கூடாது.
ஊழியர்கள் எண்ணிக்கை
பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கை விவரத்தை அரசுக்குச் சரியாக தெரிவிப்பதில்லை. காசோலை வாயிலாக அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலமாகச் செய்யும் போது சரியான ஊழியர்கள் எண்ணிக்கை விவரங்களை அளிக்க நேரிடும்.
பிஎப்
சில நிறுவனங்கள் தங்களது அனைத்து ஊழியர்களுக்கும் பிஎப் வசதியை அளிப்பதில்லை. இந்த புதிய விதிகளினால் ஊழியர்கள் அனைவரும் பிஎப் வசதியைப் பெறுவார்கள் என்று மத்திய அரசு கருதுகிறது.
காசோலை கட்டாயம் இல்லை
காசோலையாக மட்டும் தான் சம்பளம் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை, பிற வழிகளில் அளிக்கலாம், ஆனால் ரூபாய் நோட்டுகளாக அல்லது நாணயமாக அளிக்கக் கூடாது.
மாநில அரசு
மாநில அரசுகள் இந்த புதிய விதிகள் மாற்றம் பற்றி பல்வேறு பகுதிகளில் அமலுக்கு வரும் முன்பே விரைவாகத் தெரிவிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications