சில நகரங்களில் பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகின்றது என்பதை கேட்கும் போது ஆச்சர்யமாக உள்ளது.
ஆதார் அட்டையை வாங்குவது மிகவும் கடினமான வேலையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் சில நகரங்களில் பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகின்றது என்பதை கேட்கும் போது ஆச்சர்யமாக உள்ளது.
அது இருக்கட்டும் ஆதார் அட்டையை வாங்குவதற்கு வழி இருக்கிறது. இறந்தவர்களை ஆதார் அட்டையில் இருந்து நீக்க இதுவரை வழியே இல்லை என்று கூறுகின்றது சமிபத்திய ஆய்வு.
குழப்பத்தில் மக்கள்
அரசு அலுவலர்கள் முதல் மக்கள் வரை அனைவரும் இறந்தவர்களின் ஆதார் அட்டையை எப்படி நீக்குவது என்று கேட்டால் குழம்பிவிடுகின்றனர் அல்லது தவறான வழியை கூறுகின்றனர்.
இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம்
இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் (UIDAI)இணையதலத்தில் இது குறித்து தேடிய போது ஆதார் அட்டையை நீக்குவதற்கான விண்ணப்பம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் இல்லை.
மாநில அரசு விண்ணப்பம்
ஆதார் அட்டையில் இருந்து ஒரு நபரின் விவரங்களை நீக்க வேண்டும் என்றால் மாநில அரசிடம் இருந்து விண்ணப்பம் வர வேண்டும் என்கிறார் இந்தியா தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையத்தின் ஹைதரபாத் அலுவலகத்தை சேர்ந்த துணை இயக்குனர் ஜெனரல் எம்விஎஸ் ராமி ரெட்டி.
கிராம நிர்வாக அலுவலகம்
கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்தும் இறந்தவர்களின் விவரங்களை அளித்து இறந்தவர்களை நீக்கலாம் என்றும் இதன் மூலம் அவர்களுடைய ஆதார் எண்ணை செயலிழக்க செய்ய இயலும் என்றும் இந்த ஆதார் எண்ணை வேறு யாருக்கும் ஒதுக்க இயலாது என்றும் ரெட்டி கூறினார்.
மேலும் ரெட்டி கூரிய போது இந்த ஆதார் அட்டையில் இருந்து விவரங்களை நீக்குவதற்கான முறை அன்மையில் தான் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார்.
கிராம பஞ்சாயத் அலுகலகங்கள்
ரெட்டி அளித்த விவரங்களை வைத்துக்கொண்டு கிராம பஞ்சாயத் அலுவலகங்களில் இறந்தவர்கள் பெயரை ஆதார் அட்டையில் இருந்து நீக்குவது பற்றி விசாரித்து பார்த்த போது அவர்கள் கூறியது ஆச்சர்யமாக இருந்தது.
மருத்துவமனையில் இறந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பதார் அளிக்கும் விண்ணப்பத்தை வைத்து நாங்கள் இறப்பு சாண்றிதல் மட்டுமே அளிக்கிறோம், ஆதார் அட்டையில் இருந்து பெயரை நீக்க வருவோருக்கு எப்படி செய்வது என்று எங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்று கூறுகின்றனர்.
மூத்த கிராம நிர்வாக அலுவலர்
இது குறித்து மேலும் ஒரு மூத்த கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்ட போது இறப்பு சாண்றிதல் அளிப்பது மட்டும் தான் நாங்கள் செய்கிறோம். ஆதார் அட்டை விவரங்கள் பெற்று இந்தியா தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையத்தை அணுகி பெயரை நீக்குவதற்கு நிறைய கால அவகசாம் தேவை என்றும் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications