வருமான வரி துறையினர் செய்த சோதனைகளில் பல இடங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் அதிகமாகக் கிடைப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு அதிக மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது, பின்னர் வருமான வரி சோதனை, எனப் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஒரு பக்கம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், பதுக்கவும் வியக்கத்தக்க வகையில் எல்லாம் முற்சிகள் நடந்து உள்ளது.
வருமான வரி துறையினர் செய்த சோதனைகளில் பல இடங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் அதிகமாகக் கிடைப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
வித்தியாசமான முயற்சி
கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்ற ஒரு பெங்களூர் நிறுவனம் வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளது. என்னவென்று நீங்கள் ஆர்வமாக இருப்பது எனக்கும் தெரிகின்றது. இதைப் பற்றிய செய்தியைச் சேகரித்த போது எனக்கும் மிகவும் ஆர்வமாக இருந்தது.
149 டிமாண்ட் ட்ராப்ட்டுகள்
பெங்களுரில் உள்ள பசவனகுடி செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையை சிபிஐ கண்காணித்து வந்துள்ளது. அப்போது ஓம்கார் பரிமல் மந்திர் என்ற நிறுவனத்தின் தலைவர் கோபால் மற்றும் அவரது மகன் அஷ்வின் சுன்கு இருவரும் சேர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளைச் செலுத்தி 70 லட்சம் ரூபாய்க்கு 149 டிமாண்ட் ட்ராப்ட்டுகள் பெற்றுள்ளனர்.
இரண்டு நாட்களில் ரத்து
இந்த டிமாண்ட் டிராப்ட்டுகள் அனைத்தையும் பாலாஜி ஃபினான்ஸ் என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருந்தது, பின்னர் இரண்டு நாட்களில் அதனை ரத்து செய்து புதிய ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக 15 மற்றும் 18 நவம்பர் தேதிகளில் பெற்றுள்ளனர்.
ஆர்பிஐ விதிக்கு எதிரானது
வங்கி அதிகாரிகள் சங்கத்திடம் இது குறித்து கேட்ட பொழுது பணம் பெற்றுக்கொண்டு டிமாண்ட் டிராப்ட்டுகள் அளிப்பது ஆர்பிஐ விதிக்கு எதிரானது என்றும் கணக்கில் உள்ள பணத்திற்கு மட்டுமே டிமாண்ட் டிராப்டுகள் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
சிபிஐ நடவடிக்கை
வங்கி கிளையின் மூத்த நிர்வாகி லக்ஷ்மி நாயானன் மற்றும் கோப்பால், சுன்க்கு மூவரையும் சிபிஐ கைது செய்து விசாரித்து வருகின்றது. சிபிஐ தரப்பு இது வங்கி அதிகாரிகளின் உதவி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றது.
தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தில் இருந்து வங்கி கிளை அதிகாரிகளிடம் தகவலை கேட்க முயன்ற போது அவர்கள் அதைப் பற்றி கூற மறுத்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications