பிபிஎப், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் எனப் பல திட்டங்களின் வட்டி விகிதம் குறைகிறது.
ஒரு வாரத்திற்கு முன்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்துச் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தையும் குறைக்கு மத்திய அரசு முடிவு செய்தது.
அதனால் பிபிஎப், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் எனப் பல திட்டங்களின் வட்டி விகிதம் குறைகிறது. எனவே இந்த வட்டி விகித குறைப்பு ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் குறையும் என்று கூறப்படுகின்றது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஒரு வாரத்திற்கு முன்பு 2015-2016 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதத்தை 8.8 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாகக் குறைத்தது. இதனால் பிஎப் கணக்கு வைத்துள்ள 4 கோடி பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம்
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் அரசின் பத்திரங்களின் வருவாயைப் பொருத்து சிறிதளவு மாறிக்கொண்டே இருக்கும். 10 வருட அரசு பத்திரங்கள் கடந்த சில ஆண்டுகளாக லாபத்தில் குறைவை சந்தித்துள்ளது.
ஆர்பிஐ வட்டி விகித குறைப்பு
2015-ம் ஆண்டு முதல் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ வங்கி ரேப்போ வட்டி விகிதத்தை 175 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இப்போது மத்திய வங்கி கொண்டுவந்துள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற காரணங்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மத்த்ய அரசு சிறு சேமிப்பு திட்டங்களின் முதலீடுகளை அரசு பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் கனிப்பு
வரும் காலங்களில் ஆர்பிஐ வட்டி விகிதம் சந்தை மதிப்பைப் புரட்டி போடும் அளவுக்கு இருக்கும் என்றும், அடுத்த 12 முதல் 15 மாதங்களில் மட்டும் ஆர்பிஐ மேலும் 100 முதல் 125 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகத்தை குறைக்க நேரிடலாம் என்று
தமிழ் குட்ரிட்டன்ஸ் கனிப்பு கூறுகின்றது.
சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி
கடந்த ஒரு வருடமாக ரெப்போ வட்டி விகிதம் குறையும் நிலையில் வங்கிகள் தங்களது சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டியைக் குறைத்தும் வருகின்றன.
இப்போது பிபிஎப் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் நீண்ட கால முதலீட்டிற்கு நல்ல லாபத்தை அளித்து வரும் நிலையில் தொடர்ந்து வட்டி விகிதம் குறிந்து வருவது இதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications