இந்தியாவில் பொருளாதார ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு வருமான வரி விதிப்பிலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் மீதான மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் மோடி பல இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாலும், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தற்போது அவர் கையில் எடுத்திருக்கும் திட்டத்தின் மூலம் அடுத்தச் சில வருடங்களுக்குச் சாமானிய மக்களின் ஆதரவும் மோடிக்குத் தான்.
அப்படி என்னப்பா திட்டம்..?
வருமான வரி விதிப்பு..
மத்திய அரசு வருமான வரி விதிப்பின் குறைந்தபட்ச அளவை 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சமாக உயர்த்தத் திட்டமிட்டு வருவதா இந்தியா டூடே செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து நிதியமைச்சகமோ அல்லது வருமான வரித்துறையோ அதன் அதிகாரிகளோ எவ்விதமான தகவல்களையும் அறிவிக்கவில்லை.
இது சாத்தியமா..?
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பணவீக்கமும் அதிகளவில் பாதித்துள்ளது.
இதனைத் தணிக்க வருமான வரி விதிப்பில் மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த மாற்றங்கள் சாத்தியமே.
ரகுராம் ராஜன்
நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க வருமான வரி விதிப்பில் மாற்றங்களையும், அதிக வருமான பெறுவோருக்கு சில தளர்வுகளையும் அளிக்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியது அனைவருக்கும் நினைவிருக்கும்.
இதன் வாயிலாகவே வருமான வரி விதிப்பிற்குள் அதிகப்படியான மக்களைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
நிதி தேவை
ரகுராம் ராஜன் ஐடியா மற்றும் மத்திய அரசு எடுத்திருக்கும் முயற்சிகள் ஒருபுறம் சிறப்பாக இருந்தாலும், வரி விதிப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசின் மிகப்பெரிய வருமானமான வரி வருமானம் குறையும். இதனுடன் ஜிஎஸ்டியின் மூலம் அடுத்தச் சில வருடங்களுக்கு மறைமுக வரியிலும் தாக்கம் இருக்கும்.
இதன் மூலம் நாட்டு வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி தேவை இதன் மூலம் அதிகளவில் பாதிக்கப்படும்.
50:50
இந்நிலையில் வருமான வரி விதிப்பின் அளவுகளை மாற்றுவதில் வாய்ப்பு 50% மட்டுமே உள்ளது.
வருமான வரி விதிப்பு
இந்தியாவில் தற்போது வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறுவோர் எவ்விதமான வரியையும் செலுத்த தேவையில்லை. 250,001 முதல் 5,00,000 ரூபாய் வரையில் வருடாந்திர வருமானம் பெறுவோர் 10% வரியும், 5,00,001 முதல் 10,00,000 ரூபாய் 20% வரியும் மற்றும் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக வருமானம் உடையோர் 30% வரி செலுத்த வேண்டும்.
புதிய வரி விதிப்பு
தற்போது கிடைத்த தகவல்கள் படி புதிய வரி விதிப்பு மாற்றங்கள் மூலம் Rs 4-10 லட்சம் வருமானத்திற்கு 10% வரி, 10-15 லட்சம் 15% வரி, 15-20 லட்சம் வருமானத்திற்கு 20% வரி, 20 லட்சத்திற்கும் அதிக வருமானம் உடையோருக்கு 30% வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications