இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் நிலவும் போட்டி ஆரோக்கியமானதல்ல.
இந்திய சந்தையில் ஆன்லைன் வர்த்தகத்தில் சில வருடங்களுக்கு முன் குதித்த அமேசான், அதிக வாடிக்கையாளர்களைப் பெறவும், முன்னணி நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சேவையை விட மேம்படுத்தப்பட்ட சேவையை அளிக்க வேண்டும் என்ற ஓரே நோக்கத்துடன் செயல்பட்டது.
இதன் மூலம் 2015-16ஆம் நிதியாண்டில் அதிக அளவிலான தள்ளுபடி, சலுகை திட்டங்கள், சேவை விரிவாக்கம் எனப் பல வழிகளில் முயற்சி செய்தது. இவை அனைத்திற்கும் கிடைக்கும் பரிசு 3,572 கோடி ரூபாய் நட்டம்.
ஈகாமர்ஸ்
ரீடைல் வர்த்தகர்களுக்கும், வாடிக்கையாளர்களும் இணையதளம் மூலம் வர்த்தகம் செய்ய உதவும் ஒரு தளம் தான் 'ஈகாமர்ஸ்'.
இதில் ஈபே, அமேசான், அலிபாபா போன்ற நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகத்திற்கு இடம் அளிக்கிறது.
பிளிப்கார்ட்
இந்தியாவில் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனம் பிளிப்கார்ட் இண்டர்நெட் பிரைவேட் லிமிடெட். இது அதிகாரப்பூர்வமாகச் சிங்கப்பூரை தலைமையாகக் கொண்டு செயல்பட்டாலும், இந்தியாவில் வர்த்தகத்திற்காகப் பதிவு செய்ப்பட்டுள்ளது.
நஷ்டம்
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்த வருடத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2,306 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 110 சதவீதம் அதிகமானது.
காரணம்
இந்நிறுவனத்தின் 2,300 கோடி ரூபாய் நஷ்டத்திற்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியது அதன் சக போட்டி நிறுவனமான அமேசான். வர்த்தகப் போட்டிக்காக அதிகளவிலான தள்ளுபடிகளை அளிக்கப்பட்டதன் வாயிலாக இத்தகைய பெறும் தொகையை நஷ்டமாகச் சந்தித்துள்ளது.
ஆனால் அமேசான் கதையே வேறு
அமேசான்
2015-16ஆம் நிதியாண்டில் அமேசான் இந்தியா மார்கெட்பிளேஸ் நிறுவனத்தின் வருவாய் அளவுகள் 2 மடங்கு உயர்ந்தாலும் நஷ்டத்தின் அளவு 1,724 கோடி ரூபாயில் இருந்து 3,572 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது,
வருவாய்
இக்காலகட்டத்தில் அமேசான் நிறுவனத்தின் மொத்த வருவாய் 2,275 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 1,022 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த மதிப்பீடு
தற்போதய நிலையில் அமேசான் இந்தியாவின் மொத்த மதிப்பீடு 16,000 கோடி ரூபாயாகு. கடந்த 1 ஒரு வருடத்தில் அமேசான் இன்க் (தலைமை நிறுவனம்) அமேசான் இந்தியாவின் முதலீட்டை 4 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி
ஈகாமர்ஸ் சந்தையில் நிலவும் போட்டியின் மூலம் முதல் இடத்தில் இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கும் சரி, 2வது இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனமும் சரி நஷ்டத்தில் தொடர் உயர்வைச் சந்தித்து வருகிறது.


Click it and Unblock the Notifications