இந்தியாவிற்கு 'குறைவான வரி விதிப்பு' அவசியம்.. பட்ஜெட்டுக்கு முன் அருண் ஜேட்லி அதிரடி..!

உலக நாடுகளுக்குடன் போட்டி போடுவதற்கு முன் நாட்டின் வரி விதிப்புகள் குறைவாக இருக்க வேண்டும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். பட்டிஜெட் தாக்கலுக்கு 1 மாதம் மட்டுமே உள்ள நிலையில் இவரது பேச்சு..

இந்தியாவில் வரி விதிப்பு அளவுகள் தாராளமயமாக்கலுக்குப் பின் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அதுவும் கடந்த 2.5 வருடமாகக் குறைந்த வரி விதிப்பு மூலம் உலக நாடுகளுக்கு இணையான ஒரு பொருளாதாரமும் வர்த்தகச் சந்தையும் உருவாக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது, என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1ஆம் தேதி அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்கூடியே அறிவிக்கப்படும் இந்நிலையில், ஜேட்லியின் பேச்சு 2017-18ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் பல புதிய வரித் தள்ளுபடிகள் மற்றும் தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு

மத்திய அரசு

2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நேரடி வரி விதிப்பில் எதிர்பார்த்திராத அளவிலான மாற்றங்கள் மற்றும் தனிநபர் மற்றும் கார்பரேட் வரிகளிலும் அதிகளவிலான தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

மத்திய அரசு நவம்பர் 8ஆம் தேதி நாட்டில் இருக்கும் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் விதிமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பணமதிப்பிழப்பு செய்தது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் 6.5 சதவீதம் வரையில் குறைந்தது.

இந்நிலையில் நாட்டின் வளர்ச்சி அளவுகளை நிலை நிறுத்த, வரிக் குறைப்பை கொண்டு ஈடுசெய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வரி விதிப்பில் பல தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தாராளமயம்

தாராளமயம்

1991ஆம் ஆண்டுக்கு முன்பு வரை (தாராளமயத்திற்கு முன்) நாட்டில் உள்ள சட்டங்கள் அனைத்தும் அதிக வரி விதிப்பின் மூலம் அதிக வரி வருமானம் பெரும் வகையில் இருந்தது என இந்திய வருவாய் சேவை அதிகாரிகளின் பயிற்சி திட்டத்தின் துவக்க விழாவில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

உற்பத்தி மற்றும் சேவை

உற்பத்தி மற்றும் சேவை

போட்டி மிகுந்த சந்தையில் உற்பத்தி பொருட்களையும், சேவைகளையும், திறம்பட வர்த்தகச் செய்ய வேண்டும் என்றால் முதலில் வரி விதிப்புகள் குறைவாக இருக்க வேண்டும், மேலும் அவை உலகச் சந்தைகளுக்கு ஒத்து இருக்க வேண்டும்.

மேலும் போட்டி மிகுந்த சந்தை என்பது உள்நாட்டுச் சந்தையில்லை, சர்வதேச சந்தை என்பதையும் குறிப்பிட்டார் அருண் ஜேட்லி.

 

 

தாரக மந்திரம்

தாரக மந்திரம்

இதனை அடிப்படையாகக் கொண்டு தான் மத்திய அரசு கடந்த இரண்டரை வருடமாகச் செயல்பட்டு வருகிறது எனவும் அருண் ஜேட்லி. நாட்டின் மிகப்பெரிய வரி அமைப்பை வழிநடத்தும், நிர்வகிக்கும் அதிகாரிகள் தான் இந்திய வருவாய் துறை அதிகாரிகள் என்று பரிதாபாத்-இல் நடந்த இக்கூட்டத்தில் பேசினார்.

ஆதாரம்

ஆதாரம்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியவாறே 2015ஆம் பட்ஜெட் அறிக்கையில் தற்போது ஆட்சி செய்து வரும் மத்திய அரசு அடுத்த 4 வருடத்திற்குக் கார்பரேட் வரியை 25 சதவீதமாகக் குறைந்தது.

அதிகப்படியான வரி

அதிகப்படியான வரி

இந்தியாவில் அதிகப்படியான வரி விதிப்பு 35 சதவீதம், சலுகைகள், வரிவிலக்கிற்குப் பின் செலுத்தப்பட வேண்டிய அதிகப்படியான வரி அளவு 23 சதவீதமாக உள்ளது.

மறைமுக வரியின் வாயிலாக நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வந்துள்ளது. இதன் வாயிலாகவும் நிறுவனங்களுக்கு அதிகளவிலான வரிச் சேமிப்பு கிடைக்கும்.

 

மக்கள் கண்ணோட்டம்

மக்கள் கண்ணோட்டம்

மேலும் மக்கள் மத்தியில் தானாகத் தங்களது வருமானத்தைச் சமர்ப்பிக்கும் எண்ணம் வர வேண்டும், இதற்கு அடித்தளமாக விலங்குவது குறைவான வரி விதிப்பு.

ஆமாம் ஏன் பட்ஜெட் தாக்கல் தேதியை மத்திய அரசு மாறியது. என்ன காரணம்.

 

பிப்ரவரி 1

பிப்ரவரி 1

காலங்காலமாகப் பிப்ரவரி கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்-ஐ முன்கூடியே தாக்கல் செய்தால் நாட்டின் பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் புதிய மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சகம் முடிவு செய்தது. இதன் படி மத்திய அரசும், நாடாளுமன்றமும் இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம் என்ன லாபம்..?

இதன் மூலம் என்ன லாபம்..?

பிப்ரவரி மாத துவக்கத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் பட்ஜெட் அமலாக்கத்திற்கான அனைத்துப் பணிகளும் விரைவாக முடிவடைந்துவிட்டால் அரசு நிறுவனங்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிதியாண்டின் துவக்கத்தின் முதலே பயன்படுத்த துவங்கலாம்.

தற்போது நடைமுறையில் இருக்கும் முறையில், மே மாதத்தில் தான் அரசு தங்களுக்கான ஒதுக்கப்பட்ட நிதியைப் பெறுகிறது. இது நாட்டின் வளர்ச்சியில் தொய்வு ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறது.

 

மே மாதம்

மே மாதம்

ஒவ்வொரு நிதியாண்டின் மே மாதத்தின் 2வது வாரத்திற்குள் மத்திய பட்ஜெட் அறிக்கையின் படி நிதி சார்ந்த அனைத்து மசோதாக்களும் ஒப்புதல் பெற்றப்படும்.

புதிய நடைமுறையில் இந்தப் பணிகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

 

ரயில்வே பட்ஜெட்

ரயில்வே பட்ஜெட்

1996ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் அமைந்து வரும் தொடர் கூட்டணி ஆட்சியின் பின்னர் மத்திய அரசுகள் தொடர்ந்து பொதுப் பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட்-ஐ இணைக்க வலியுறுத்தி வருகிறது.

நாடாளுமன்றத்தில் தனியாகத் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் அறிக்கையின் மூலம் மக்களுக்கு அதிகளவிலான சலுகை மற்றும் நல்ல திட்டங்களை அறிவித்து ஆளும் கட்சிகள் தங்களை மேன்படுத்திக் காட்டிக்கொள்ளப் பயன்படுத்தியது.

 

ரத்து

ரத்து

1924 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கத்தை மத்திய அரசு செப்டம்பர் மாதம் ரத்து செய்யத்து.

2017-18ஆம் நிதியாண்டு முதல் பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்படும். இதன் மூலம் இனி மத்திய அரசு ஒன்றை பட்ஜெட் தாக்கல் முறையே நடைமுறைப்படுத்த உள்ளது.

இதனால் ரயில்வே துறை செயல்முறையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.

 

'இவர்' முக்கியக் காரணம்..!

'இவர்' முக்கியக் காரணம்..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+