இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் தொடர்ந்து நஷ்டத்த சந்தித்துக் கொண்டு இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு முதல் இடம் கிடைத்துள்ளது. எதுல..?
2016ஆம் ஆண்டில் அதிகப்படியான உயர் அதிகாரிகள் வெளியேறிய நிறுவனம் எது என்று ஆய்வு செய்த போது ஈகாமர்ஸ் துறையில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
பிளிப்கார்ட்
நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் 2016ஆம் பல மாற்றங்களை சந்திதுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நிர்வாகத்திலும் வர்த்தகத்திலும் பிரச்சனை வந்தது.
இதன் எதிரொலியாக இந்நிறுவனத்தில் இருந்து உயர் அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறினர்.
முக்கிய அதிகாரிகள்
இப்படி வெளியேறிய உயர் அதிகாரிகள் தலைமை நிதியியல் அதிகாரிகள் முதல் வர்த்தக நிர்வாகிகள் வரை உள்ளனர்.
சஞ்சய் பஜ்வீஜா (CFO), பீயூஷ் ராஜனா (CTO), முகேஷ் பன்சால், லலித் சர்னா, சுனில் கோபிநாத், ஆனந்த் கேவி, பிரகாஷ் தில்வானி, புனித் சோனி மற்றும் சத்யம் பன்சால் ஆகியோர் 2016ஆம் ஆண்டில் வெளியேறியுள்ளனர்.
சராசரி பணிக்காலம்
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சராசரி பணிக்காலம் வெறும் 11.5 மாதங்களாக உள்ளது.
ஸ்னாப்டீல் 38 மாதங்கள், ஷாப்கூலுஸ் 27.5 மாதங்கள், ஓலா 23 மாதங்கள், மூ சிக்மா 25.5 மாதங்களாக உள்ளது.
இதன் மூலம் குறைந்த பணிகாலத்தை கொண்ட நிறுவனமான பிளிப்கார்ட் உருவெடுத்துள்ளது.
ஆய்வுகள்
இந்த ஆய்வுகள் கடந்த 5 வருடங்கள் தகவல்களை கொண்டு திரட்டப்பட்டது.


Click it and Unblock the Notifications