வீட்டுக் கடன், வாகன கடன் மீதான வட்டி குறைப்பு: எஸ்பிஐ அறிவிப்பு

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான MCLR எனப்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 90 புள்ளிகள் வரை குறைத்துள்ளது.

இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் ரிஸ்க் அளவுகளுக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறுபடும்.

பல வருடங்களாகத் துவண்டுப்போன எஸ்பிஐ வங்கியின், கடன் வர்த்தகம் இதன் மூலம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கிறது.

MCLR என்றால் என்ன

MCLR என்றால் என்ன

ஒரு வங்கியின் MCLR என்னும் அடிப்படை வட்டி விகிதத்தைப் பொறுத்தே வீட்டுக் கடன், வாகன கடன், நில கடன், தனிநபர் கடன் எனப் பல கடனுக்கான வட்டி விகிதங்களும் மாறுபடும்.

இந்நிலையில் தற்போது நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா MCLR அளவை 90 புள்ளிகள் அதாவது 0.90 சதவீதம் குறைந்த நிலையில் நாட்டின் பிற வங்கிகளும் தங்களது வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது.

 

ஒரு வருடம்

ஒரு வருடம்

2016ஆம் ஆண்டில் 8.9 சதவீதமாக இருந்த MCLR விகிதம், 2017ஆம் ஆண்டு அதாவது அடுத்த ஒரு வருடத்திற்கு இதன் அளவு 8.0 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனத் தனது செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ மட்டும் அல்லாது நாட்டின் பல முக்கிய வங்கிகளின் முக்கிய வர்த்தகமான வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.

 

புதிய கடன்

புதிய கடன்

மேலும் இப்புதிய மாற்றங்கள் அனைத்தும் புதிதாகக் கடன் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும்.

மேலும் உங்கள் கிரேடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், வட்டி குறைத்து அதிகளவில் பெற முடியும்.

 

எஸ்பிஐ வீட்டுக் கடன்

எஸ்பிஐ வீட்டுக் கடன்

மேலும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வீட்டுக்கடனுக்கான MCLR விகிதம் 8.25 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பணப் புழக்கம்

பணப் புழக்கம்

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக வங்கியில் தேவைக்கு அதிகமான அளவிற்குப் பணப் புழக்கம் உள்ள நிலையில் வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் கடன் வர்த்தகத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த வட்டி குறைப்பிற்கு அதீத பணப்புழக்கம் முக்கியக் காரணமாகும்.

 

 பழைய கடன்கள்

பழைய கடன்கள்

மேலும் 2016ஆம் ஆண்டில் அதற்கு முன்பு வாங்கப்பட்ட அனைத்துக் கடன்களும் புதுப்பிப்புச் செய்யப்படும் போது MCLR விகிதத்துடன் இணைக்கப்படும். அதுவரை BASE RATE எனப்படும் அடிப்படை விகிதத்துடனே கணக்கிடப்படும்.

BASE RATE

BASE RATE

எஸ்பிஐ வங்கி MCLR விகிதத்தை 90 புள்ளிகள் வரை குறைத்த நிலையில், BASE RATE எனப்படும் அடிப்படை விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் குறைந்து 9.25 சதவீதமாக அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+