பாராளுமன்ற விவகாரங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஜனவரி 31-ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 31-ல் இருந்து பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசின் முடிவு
பட்ஜெட்டிற்கான பொருளாதார சர்வே ஜனவரி 31-ம் தேதி முதல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்மையில் தான் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு 2017, பிப்ரவரி 1-ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பு
பட்ஜெட் கூட்டத்தை முன்கூடியே நடத்த பஜக அரசு முடிவு செய்தபோது பிற கட்சிகள் அதை எதிர்த்தன. மேலும் முன்பு இருந்த பிப்ரவரி 28-ம் தேதியே பட்ஜெட் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வழியுறுத்தினர்.

விளக்கம்
ஆனால் இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு பிப்ரவரி 28-ம் தேதி பட்ஜெட் கூட்டம் துவங்கி ஒதுக்கப்படும் நிதிகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்குப் பகிர்ந்து அளிக்க மே மாதம் வரை தேவைப்படுகின்றது என்றும் அதனால் நலப்பணிகள் தொடர் தாமதமாகுவதாகவும், வருட முடிவில் பல திட்டங்கள் தேங்கும் நிலையிலும் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படாமலும் உள்ளது. எனவே முன்பே பட்ஜெட் தாக்கல் செய்தால் திட்டங்களை செயல்படுத்த நீண்ட காலம் கிடைக்கும் என்று கூறியது.

முன்கூடியே துவக்கம்
மத்திய அமைச்சரைவை குழுக்களின் செவ்வாய்க்கிழமை கூட்டம் இன்னும் முன்பாகவே அதாவது ஜனவரி இறுதி முதல் பட்ஜெட் கூட்டத்தை துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் நலப்பணிகள் துவக்கம்
பட்ஜெட் கூட்டம் முன்பே துவங்கப்படுவதால் ஏப்ரல் 1 முதல் நிதி ஆண்டு துவக்கத்தில் இருந்தே பல நலத்திட்டங்கள் துவங்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
செவ்வாய்க்கிழமை நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஆனந்த் குமார் ஆகியோர் உட்படப் பலர் பங்கேற்றனர். கூட்டம் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.

ரயில்வே பட்ஜெட் இல்லை
1924 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரயில்வே பட்ஜெட் வழக்கத்தை வரும் நிதியாண்டுகளில் மத்திய அரசு, பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைத்துள்ளது.
இப்புதிய மாற்றத்திற்கு நாடாளுமன்றத்தில் முழுமையான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளையர்கள் விட்டுச்சென்ற மற்றொரு பழக்கத்திற்கும் மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.