இனி இந்தியாவில் எந்த ஹோட்டல், ரெஸ்டாரண்ட்களுக்குச் சென்றாலும், சாப்பிட்ட பின் சேவை கட்டணத்துடன் பில் கொடுத்தால், வாடிக்கையாளராகிய நீங்கள் அதனைச் செலுத்த மறுக்கலாம் என்று உணவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது உண்மையிலேயே வாடிக்கையாளராகிய மக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.
உணவு வர்த்தகச் சந்தை
இந்தியாவில் முக்கிய வர்த்தகச் சந்தைகளில் ஒன்றான உணவு துறையில் இது நாள் வரை மக்களுக்குத் தெரியமால் செய்து வந்த மோசடி தற்போது வெளிவந்துள்ளது.
சேவை கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தி ஹோட்டல், ரெஸ்டாரண்ட்கள் 12 முதல் 15 சதவீதம் அளவிலான தொகை வசூல் செய்து வந்தது.
ஆனால் தற்போது இதற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.
நுகர்வோர் விவகார துறை
திங்கட்கிழமை மாலை, உணவு துறையின் கீழ் செயல்படும் நுகர்வோர் விவகார துறைக்கு வந்த நுகர்வோர் புகார்களில் எழுந்த கேள்விகளுக்கு இந்திய ஹோட்டல் அமைப்பிடம் விளக்கம் கோரியது.
இந்நிலையில் இவ்வமைப்பு சேவை கட்டணத்தை செலுத்துவது முற்றிலும் வாடிக்கையாளர் விருப்புரிமை, வாடிக்கையாளர் தங்களது உணவு பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது வேறு காரணங்களுக்காகச் சேவை கட்டணத்தை செலுத்தாமால் இருக்கவும் உரிமை உண்டு. என்று பதில் அளித்துள்ளது.
மாநில அரசு
இந்நிலையில் இந்திய ஹோட்டல் அமைப்பு விளக்கம் அளித்த அடுத்த நிமிடமே மத்திய அரசு மாநில அரசுகளுக்குச் சேவை கட்டணம் வருப்புரிமை குறித்த மக்களுக்குத் தெளிவுப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
இனி இந்தியாவில் சேவை கட்டணம் வசூல் செய்யும் அனைத்து ஹோட்டல், ரெஸ்டாரண்ட்களும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986இன் படி சேவை கட்டணம் செலுத்துவது வாடிக்கையாளர் விருப்புரிமை என்பதை விளக்கும் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கட்டாயப்படுத்திப் பிடுக்கும் பணம்
இந்தியாவில் சேவை கட்டணம் என்ற பெயரில் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்கள், வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பெயரில் அளிக்க வேண்டிய 'டிப்ஸ்' தொகையைக் கட்டாயப்படுத்திப் பிடுங்கி வருகிறது.
இது சேவை சிறப்பாக இருந்தாலும் சரி, மோசமாக இருந்தாலும் சரி பல ஹோட்டல்களில் சேவை கட்டணம் கட்டாயமாக வசூல் செய்யப்படுகிறது.
முற்றுப்புள்ளி
ஹோட்டல், ரெஸ்டாரண்ட்களில் வசூல் செய்யப்படும் சேவை கட்டணம் குறித்து எழுந்த நுகர்வோர் புகார் மூலம் தற்போது இந்திய மக்கள் அனைவரும் மிகப்பெரிய உண்மை தெரிந்துக்கொண்டது மட்டும் அல்லாமல் மக்களின் பணம் அதிகளவில் மிச்சப்படுத்தப்படுகிறது.
கேள்விகள்
கேள்விகள் எழுப்பினால் தான் விடையும் தீர்வும் கிடைக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.
நுகர்வோர் புகார் மற்றும் தகவலறியும் திட்டத்தின் மூலம் இந்தியாவில் பல உண்மைகள் வெளியாகியுள்ளது.
அடுத்த முறை
அடுத்த முறை நீங்கள் எந்தொரு ஹோட்டல், ரெஸ்டாரண்ட்களுக்குச் சென்றாலும் சேவை கட்டணம் குறித்த கேட்டவும் உங்களுக்கான உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications