இந்தியாவில் இணையதள ஷாப்பிங் செய்ய 83 சதவீதம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர் - அறிக்கை

செப்டம்பர் மாதம் பிளிப்கார்ட் நிறுவனம் 100 மில்லியன் பயனர்களைப் பெற்று மதிப்பாய்வு செய்யும் போது 38% சரிவைச் சந்தித்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இகாமர்ஸ் சந்தை சில காலமாக எதிர்பார்க்காத அளவு வளர்ந்து வருகின்றது. செப்டம்பர் மாதம் பிளிப்கார்ட் நிறுவனம் 100 மில்லியன் பயனர்களைப் பெற்று மதிப்பாய்வு செய்யும் போது 38% சரிவைச் சந்தித்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.

2020-ம் ஆண்டு இந்தியாவில் இணையதளச் சில்லறை வர்த்தகம் 48 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் என்று கூறிவரும் நிலையில் 83 சதவீத இந்தியர்கள் இணையதள ஷாப்பிங் செய்ய ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

ரெகேலிக்ஸ் ஆய்வறிக்கையின் படி இணையதள ஷப்பிங் செய்பவர்களில் மொபைல் ஷாப்பிங் தான் மிகவும் பிரபலமாக உள்ளது.

ஷப்பிங் செய்பர்களில் 3-ல் ஒருவர் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர்

ஷப்பிங் செய்பர்களில் 3-ல் ஒருவர் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர்

இணையதள ஷப்பிங் வசிதியாகவும், எளிதாகவும், விலையை ஓப்பிடும் படியாகவும் உள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இணையதள ஷப்பிங் செய்பவர்களில் 33 சதவீதத்தனர் மாதத்திற்கு ஒரு முறையாவது பொருட்களை வாங்குகின்றனர்.
28 சதவீத்தினர் வாரத்திற்கு ஒரு முறையும், 25 சதவீத்தினர் 3 மாதத்திற்கு 1 முறையும், 14 சதவீதத்தினர் வருடத்திற்கு 1 முறையும் இணையதளம் மூலம் பொருட்களை வாங்குகின்றனர்.

 

இணையதள ஷாப்பிங் என்றால் இந்தியர்களுக்குப் பிளிப்கார்ட் தான்

இணையதள ஷாப்பிங் என்றால் இந்தியர்களுக்குப் பிளிப்கார்ட் தான்

இந்தியாவில் 44 சதவீத இணையதள வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தை விரும்புகின்றனர். 32 சதவீதத்தினர் அமேசான் நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளார்கள். 19 சதவீதத்தினர் ஸ்னாப்டீல் நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்திய நிறுவனன்ங்களில் பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்களை இணையதள ஷாப்பிங்கிற்குப் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

 

இகாமர்ஸ் இணையதளங்களில் பார்த்துவிட்டு நேரடியாகப் பொருட்களை வாங்குபவர்கள்

இகாமர்ஸ் இணையதளங்களில் பார்த்துவிட்டு நேரடியாகப் பொருட்களை வாங்குபவர்கள்

இகாமர்ஸ் இணையதளங்களில் பொருட்களை ஒப்பிட்டுப் பார்த்த பிறகு நேரடி ஸ்டோர்களிலும் பொருட்களைக் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர். இகாமர்ஸ் தளங்களை இவர்கள் ஒரு ஒப்பிட்டு சாதனமாகவே கருதுகின்றனர்.

42 சதவிதத்தினர் கேஜெட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை இணையதளத்தில் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு நேரடியாக ஸ்டோர்களில் வாங்குகின்றனர். இதே போன்று ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் ஒப்பிட 33 சதவீதத்தினரும், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குபவர்களில் 21 சதவீதத்தினரும், அழகுசாதன பொருட்கள் வாங்குபவர்களில் 4 சதவீதத்தினரும் இணையதளங்களை ஒப்பிட்டு மீடியமாகப் பயன்படுத்துகின்றனர்.

 

கேஷ் ஆன் டெலிவரிக்கே முன் உரிமை

கேஷ் ஆன் டெலிவரிக்கே முன் உரிமை

இணையதள ஷாப்பிங் செய்பவர்களில் கேஷ் ஆன் டெலிவரியை தான் அதிகப்படியாக 63 சதவீதத்தினர் பயன்படுத்துகின்றனர். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயப்படுத்தி 17 சதவீதத்தினரும், இணையதள வங்கி சேவையைப் பயன்படுத்தி 17 சதவீதத்தினரும், இஎம்ஐ மூலம் 3 சதவீதத்தினரும் இணையதளம் மூலம் பொருட்களை வாங்குகின்றனர்.

இணையதளம் மற்றும் செயலி

இணையதளம் மற்றும் செயலி

மொபைல் போன் மூலம் பொருட்களை வாங்குபவர்களில் 94 சதவீதத்தினர் செயலிகளையும், 6 சதவீதத்தினர் இணையதளங்களையும் பயன்படுத்துகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+