உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் தனது இந்திய கிளையின் புதிய நிர்வாக இயக்குனராகக் கரன் பஜ்வா அவர்களை நியமித்துள்ளது.
முன்பு இப்பணியிடத்தில் இருந்த வனிதா நாராயனா தற்போது இந்திய கிளையின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஐபிஎம் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் அதிக லாபம் அளிக்கும் ஒரு சந்தை என்றால் இந்தியா தான். இப்படி இருக்கும் ஏன் இந்த மாற்றங்கள்..?
ஐபிஎம் இந்தியா
ஐபிஎம் இந்தியாவின் வர்த்தகம் லாபத்தில் இருந்தாலும் உலகளாவிய வர்த்தகம் கடந்த 18 மாதங்ளாகத் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இதனால் பல நாடுகளில் வர்த்தகம் குறைந்து வருவது மட்டுமல்லாமல் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் குறைத்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் விரிவாக்கம்
உலக நாடுகளில் இருக்கும் வர்த்தகப் பிரிவுகளில் செலவுகள் மற்றும் ஊழியர்களைத் தொடர்ந்து குறைத்து வரும் ஐபிஎம், இந்தியாவில் மட்டும் அதிக முதலீடு மற்றும் வர்த்தக விரிவாக்கம் செய்து வருகிறது.
2016ஆம் ஆண்டில் இந்தியாவில் பிக்பிக்ஸ் சாப்வேர், டெலிலாஜிக் இந்தியா மற்றும் யூனிகா சாப்டெக் சிஸ்டம்ஸ் இந்தியா ஆகிய 3 வர்த்தகப் பிரிவுகளையும் ஸ்டெர்லிங் காமர்ஸ் சொல்யூஷன்ஸ் இந்தியா என ஒன்றை நிறுவனமாகப் புதுப்பித்துள்ளது.
இதன் மூலம் ஐபிஎம் இந்திய வர்த்தகத்தில் மிகமுக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது, இதன் ஒரு பகுதியாகவே இந்தப் புதிய தலைமைகள் நியமிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடம்
கரன் பஜ்வா 2015ஆம் ஆண்டில் ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளின் வளர்ச்சி மற்றும் திட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவராக இருந்தார்.
புதிய பதவி
இனி கரண் பஜ்வா, ஐபிஎம் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் ஆசிய பகுதிகளின் விற்பனை, மார்கெட்டிங், சேவை மற்றும் டெலிவரி ஆப்ரேஷன்ஸ் ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளார்.


Click it and Unblock the Notifications