மத்திய அரசுக்குச் சொந்தமான முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானங்களை வாங்குதலும் குத்தகைக்கு விடுவதிலும் 70,000 கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்யப்பட்டது.
இந்த ஊழல் வழக்கை தற்போது முழுமையாகச் சிபிஐக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் ஏர் இந்திய நிறுவனத்திற்கு இந்த ஊழல் வழக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டும் அல்லாமல் ஏர்இந்தியாவின் வர்த்தகமும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
70,000 கோடி ரூபாய்
2005-06ஆம் ஆண்டில் UPA ஆட்சியில் இருந்த 2005-06 ஆண்டுக் காலகட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானங்களை வாங்குவதிலும் குத்தகைக்கு விடுவதிலும் 70,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ
இதுகுறித்துத் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்டு வழக்கின் ஆய்வுகள் மற்றும் ஆதாரங்களை ஜூன் மாதத்திற்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது.
விசாரணை
2013ஆம் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கிற்குத் தொடர்புடைய சுமார் 55 பேரை விசாரித்ததாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இவ்வழக்கின் விசாரணையில் தெரிவித்தார்.
ப.சிதம்பரம்
விமானங்கள் வாங்குவது குறித்து ஆலோசனை செய்ய அப்போதைய நிதித்துறை அமைச்சர் ப. சிதம்பரம், சட்டத்துறை அமைச்சர் ஹெச் ஆர் பரத்வாஜ் மற்றும் பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சரான பரபூல் பட்டேல் ஆகிய தலைமையில் டிசம்பர் 20, 2005ஆம் வருடம் ஒரு குழு அமைக்கப்பட்டு.
போயிங்
டிசம்பர் 24, 2005ஆம் தேதி போயிங் மற்றும் ஜிஇ நிறுவனங்களிடம் விமானங்கள் குறித்த விவாதம் நடந்தது.
68 விமானங்கள்
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் 68 விமானங்களை 2011ஆம் ஆண்டு டெவரி செய்ய வேண்டும் என்று இரு தரப்பு ஒப்புதல் அளித்துக் குழுவின் தலைவரான ப.சிதம்பரம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் விமானங்கள் முழுமையாக டெலிவரி செய்யப்பட்டது 2012.
1000 கோடி ஊழல்
மேலும் ஏர் இந்தியாவின் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட பயோமெட்ரிக் சிஸ்டத்திலும் 1000 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது எனப் பொது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications