வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்குள் இக்கூட்டணியின் மலேசிய தலைவர் டி. அனந்தகிருஷணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், இக்கூட்டணிக்கு சொந்தமான அனைத்து அலைக்கற்றைகளை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் உச்சி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனால் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனங்களின் இணைப்புக் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
வழக்கு
இவ்வழக்கின் விசாரணையின் தீர்ப்பில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குறித்து எதுவும் கூறப்படவில்லை, வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் வெளியிட்ட படி, ஏர்செல் நிறுவனத்தின் 2ஜி உரிமம் பிற நிறுவனங்கனங்களுக்கு மாற்றுவதில் எவ்விதமான தடையும் அறிவிக்கவில்லை.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
தற்போதைய நிலையில் வழக்கு முழுவதும் 2ஜி அலைக்கற்றை மட்டும் சார்ந்துள்ளதால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனத்தின் 3ஜி மற்றும் பிற அலைக்கற்றைகளை எவ்விதமான பிரச்சனைகளுமின்றிப் பயன்படுத்த முடியும்.
ஆனால் இவ்வழக்கின் காரணமாக இரு நிறுவனங்களின் இணைப்பு மற்றும் மதிப்பீட்டில் பிரச்சனைகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சனை
தற்போதைய நிலையில் ஏர்செல்-இன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 2ஜி அலைக்கற்றை மட்டுமே வைத்து இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்திற்குச் சொந்தமான 2ஜி அலைக்கற்றைகள் மத்திய அரசு எடுத்துக்கொண்டால், இதன் வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்வார்கள்.
தாமதம்
ஏர்செல் நிறுவனத்தை அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாங்குவது குறித்துச் செப்டம்பர் 2016ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கின் காரணமாக இருநிறுவனங்களின் இணைப்புக் காலதாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications