பிராந்திய போக்குவரத்து அலுவலர்களில் அளிக்கப்படும் ஒட்டுநர் உரிமம், பயிற்சி உரிமம், ஒட்டுநர் அனுமதி, டிரைவிங் ஸ்கூல் உரிமத்திற்கான புதுப்பித்தல் கட்டணம் மற்றும் 3 சக்கர வாகன பதிவு கட்டணங்கள் ஆகியவற்றின் கட்டணங்களை உயர்த்த உள்ளதாகச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இப்புதிய கட்டண உயர்வுகள் அனைத்தும் மாநில போக்குவரத்து அமைச்சகங்களுடன் ஆலோசனை செய்த பின்பே அறிவித்துள்ளது.

இந்தக் கட்டண உயர்வின் மூலம் மாநிலங்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைப்பதும் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் நாடு முழுவதும் ஒரே கட்டணத்தை இதன் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என IFTRT அமைப்பின் உயர் அதிகாரி எஸ்பி சிங் தெரிவித்துள்ளார்.
இக்கூடுதல் வருமானத்தின் மூலம் மாநிலங்கள் ஆட்டோமேஷன் மற்றும் டெக்னாலஜி தேவைகளைப் பூர்த்திச் செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி உரிமம் - 150 ரூபாய்
திரும்ப உரிமத்தைப் பெற - 50 ரூபாய்
திரும்பத் தேர்வை எடுக்க - 300 ரூபாய்
ஒட்டுநர் உரிமம் - 200 ரூபாய்
சர்வதேச ஒட்டுநர் உரிமம் - 1000 ரூபாய்
ஒட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க - 200 ரூபாய்
விலாசத்தை மாற்ற 2 சக்கர வாகனங்கள் - 300 ரூபாய்
பிற வாகனங்களுக்கு 500 ரூபாய்
ஆகியவை புதிய கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications