ஆசியாவின் முக்கிய நகரங்களில் உள்ள பிபிஒ, ஐடி ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டில் நிறுவப்படவுள்ளதை அடுத்து ரியல் எஸ்டேட் மார்க்கெட் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் ஆசியாவின் சிறந்த ரியல் எஸ்டேட் நகரங்கள் குறித்த சர்வே ஒன்றை அர்பன் லேண்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் பிரைஸ்வாட்ச் ஹவுஸ் கூப்பர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து எடுத்துள்ளது.
இந்த சர்வேயில் ஆசியாவின் முக்கிய நகரங்களில் உள்ள பிபிஒ, ஐடி ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டில் நிறுவப்படவுள்ளதை அடுத்து ரியல் எஸ்டேட் மார்க்கெட் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு மற்றும் மும்பை
இதன்படி பெங்களூரு மற்றும் மும்பை இந்திய அளவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்யும் நகரங்களாக இருக்கும். இந்த சர்வேயில் பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்களும் 22வது இடத்தில் உள்ளன. இதே இரண்டு நகரங்கள் கடந்த ஆண்டு 12வது மற்றும் 13வது இடத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான்
கடந்த 2016ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்து முதலாவது இடத்தில் இருந்த ஜப்பான் தலைநகர் டோக்யோ, இந்த ஆண்டு 12வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதற்குத் தவறான பொருளாதார முடிவுகளும், நிலையில்லாத தடுமாற்றமான பொருளாதார நிலைகளும்தான் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர்
கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டிகளில் ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர் கடந்த ஆண்டு 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் உள்நாட்டுப் பொருளாதார சிக்கல் காரணமாகவே பின் தங்கியுள்ளது
சீனா
இந்தியாவிலும் வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் பிசினஸ் பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக ஆசிய நகரங்களில் இருந்து மேற்கத்திய நாடுகள் பக்கமே பெரும்பாலான நிறுவனங்களின் பார்வை சென்றுள்ளது. குறிப்பாக நியூயார்க் மற்றும் லண்டன் நகரங்களில் சீனாவின் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்த உள்ளது.
மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கிலாந்து விலக எடுத்த முடிவுக்குப் பின்னர் சீனாவின் நிறுவனங்கள் லண்டனில் கால்பதித்து அங்கிருந்து உலகம் முழுவதும் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புவதால் லண்டன் ரியல் எஸ்டேட் மிகச்சிறப்பாக வரும் ஆண்டுகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications