நவம்பர் 8-ம் தேதி முதல் 2 லட்சத்திற்கும் அதிகமாக 60 லட்சம் வங்கி கணக்கில் பணம் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் தொகை 7 லட்சம் கோடி ரூபாய் என்றும் வருமான வரித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார
ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தலில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமாக வங்கி கணக்கில் செலுத்தியவர்களின் பட்டியலை வருமான வரித் துறை சேகரித்து வந்துள்ளது.

நவம்பர் 8-ம் தேதி முதல் 2 லட்சத்திற்கும் அதிகமாக 60 லட்சம் வங்கி கணக்கில் பணம் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் தொகை 7 லட்சம் கோடி ரூபாய் என்றும் வருமான வரித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பெறும் மதிப்பு ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த பிறகு இவ்வளவு அதிகமான தொகை வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்திருக்கும் வங்கி கணக்குகளின் விவரங்களை வங்கிகளின் உதவியுடன் சேகரித்து வருகின்றது.
வருமான வரித் துறையினரிடம் உள்ள தரவை பயன்படுத்தி உண்மையான பரிவர்த்தனைகள் எவை மற்றும் உண்மையில்லா பரிவர்த்தனை எவை என்று கண்டறியப்பட்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நோட்டிஸ் அனுப்பப்படும் என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications