ஏர் ஏசியாவின் ‘2017 இயர்லி பர்டு சேல்’சலுகை திட்டத்திப் கீல் 2017 மே 1 முதல் 2018 பிப்ரவரி 6-ம் தேதி வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 2017 ஜனவரி 15-ம் தேதிக்குள் புக் செய்ய வேண்டும்.
விமான போக்குவரத்து நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் 799 ரூபாய்க்குச் சலுகை விலை கட்டணங்களை அறிவித்துள்ளது.
ஏர் ஏசியாவின் '2017 இயர்லி பர்டு சேல்'சலுகை திட்டத்திப் கீல் 2017 மே 1 முதல் 2018 பிப்ரவரி 6-ம் தேதி வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 2017 ஜனவரி 15-ம் தேதிக்குள் புக் செய்ய வேண்டும்.
ஏர் ஏசியா சலுகை உள்ள வழித்தடங்கள்
இம்பாலில் இருந்து கவுஹாத்தி செல்ல 799 ரூபாயும், பெங்களூரில் இருந்து கொச்சி செல்ல 999 ரூபாயும், கொச்சியில் இருந்து ஹைதராபாத் வரை செல்ல 1,499 ரூபாய் எனவும், ஹைதராபாத்தில் இருந்து கோவா செல்ல 1,499 ரூபாய் எனவும், சண்டிகரில் இருந்து பெங்களுர் செல்ல 2,999 ரூபாய் எனவும் டிக்கெட் கட்டணத்தை அறிவித்துள்ளது ஏர் ஏசியா.
ஜெட் ஏர்வேஸ்
அதே நேரம் 999 ரூபாய்க்கு விமான டிக்கெட் கட்டணம் அறிவித்து இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஜனவரி 9-ம் தேதி வரை டிக்கெட்களை புக் செய்யலாம் என்று சலுகையை நீட்டித்து அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா
தேசிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா குடியரசு தின சலுகை விலை டிக்கெட் கட்டணங்களை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை விலை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஏசி 2 அடுக்கப் பெட்டி சீட்டுகளின் விலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தின சலுகை
ஏர் இந்தியாவின் குடியரசு தின சலுகை விலையில் 2017 ஜனவரி 26 முதல் ஏப்ரல் 30 வரையிலான விமான பயணங்களுக்கான டிக்கெட்களை 2017 ஏப்ரல் 20 வரை புக் செய்யலாம்.
டிக்கெட் புக் செய்யும் போது நீங்கள் பயணம் செய்ய இருக்கும் தேதி மற்றும் புக் செய்யும் தேதிக்கும் 20 நாட்களுக்குக் குறைவாக இருக்கக் கூடாது.
ஏர் இந்தியா சலுகை கட்டணங்கள்
ஏர் இந்தியாவில் குறைந்தபட்ச சலுகை விலையாக 1,080 ரூபாய்க்கு டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை பயணம் செய்யலாம். பிற வழித்தடங்களில் டெல்லியில் இருந்து மும்பை செல்ல 2,401 ரூபாயும், டெல்லியில் இருந்து பெங்களூரு செல்ல 2,952 ரூபாயும், டெல்லியில் இருந்து சென்னை செல்ல 3,100 ரூபாயும் கட்டணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications