நாட்டின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கும் 'பட்ஜெட் 2017'..!

பல புதிய மாற்றங்களுடன் பிப்ரவரி 1ஆம் தேதி, மோடி தலைமையிலான மத்திய அரசு 2017-18ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் 2016ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்திலும், வர்த்தகச் சந்தையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது, அதில் பணமதிப்புழப்பு நடவடிக்கை மிகமுக்கியமாகப் பார்க்கப்படும் நிலையில், 2016-17ஆம் ஆண்டுக்கான 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் அறிக்கை வெறும் கண்துடைப்பாக மட்டுமே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

பட்ஜெட் 2017

பட்ஜெட் 2017

2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக இல்லாத காலகட்டத்தில் நாம் உள்ளோம்.

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஜனவரி 20ஆம் தேதியாவது அறிக்கையை அச்சடிக்கும் பணிகளைத் துவங்க வேண்டும்.

ஆனால் பட்ஜெட் தயாரிப்பதற்கான அடிப்படை தகவல்களைக் கூட இன்னும் திரட்டப்படவில்லை என்பது தான் இதன் சோகம்

 

அடிப்படைத் தகவல்

அடிப்படைத் தகவல்

ஆம், 2016ஆம் ஆண்டு மத்திய அரசின் மிகமுக்கிய நடவடிக்கை என்றால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கூட இன்னும் புள்ளியில் அலுவலகம் ஆய்வு செய்யவில்லை.

இப்படி இருக்கும் போது 2017-18ஆம் ஆண்டுக்கான சரியான பட்ஜெட் அறிக்கையை எப்படித் தயாரிக்க முடியும்.?

 

3 வருடச் சரிவு..

3 வருடச் சரிவு..

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் வளர்ச்சி அளவுகள் 3 வருடச் சரிவிற்குக் கொண்டு செல்லும் புள்ளியில் அலுவலகம் தோகராயக் கணக்கை மட்டும் அளித்துள்ளது.

இதன் படி மார்ச் 2017ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 6 சதவீதம் என்ற அளவிற்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உறுதி

உறுதி

இந்நிலையில் நிதியமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டி.எஸ்.மாலிக் கூறுகையில், மத்திய அரசிடம் பட்ஜெட் தயாரிப்பதற்கான போதிய தகவல்கள் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்

இதனை வைத்துப் பார்க்கும் போது புள்ளியியல் அலுவலகம், அவர்களிடம் உள்ள தகவல்களை வைத்தும், பணமதிப்பிழப்பின் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கணக்கில் சேர்க்காமல் நாட்டின் வளர்ச்சி தேவையானவற்றை வைத்து அறிக்கையைத் தயார் செய்திருப்பார்கள்.

அருண் ஜேட்லி தலைமையிலான நிதியமைச்சகம், அதனைப் பணமதிப்பிழப்பிற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது.

 

முக்கியத் தகவல்கள் தேவை

முக்கியத் தகவல்கள் தேவை

2016, நவம்பர் 8ஆம் தேதி மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் விவசாய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு, தொழிற்துறை உற்பத்தியின் சரிவு, அரசின் செலவீடுகள் ஆகிய முக்கியமான தகவல்களை அளிக்க வேண்டிய புள்ளியில் அலுவலகம் அளிக்க முடியாத நிலையில் உள்ளது.

இத்தகைய தருணத்தில் எப்படி நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சரியான பட்ஜெட் அறிக்கையைத் தயார் செய்ய முடியும் என்பதே தற்போதைய கேள்வி.?

 

 

கார்ப்ரேட் முடிவுகள்

கார்ப்ரேட் முடிவுகள்

மேலும் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்டு இருக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை ஜனவரி மாதத்திற்குள் கண்டிப்பாக வெளியிடாது. இதுவும் பட்ஜெட் திட்ட வடிவத்தைப் பாதிக்கும்.

இத்தகைய காரணங்களால் மத்திய அரசால் துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்களைச் சரியான முறையில் தீட்ட முடியாது. இது நாட்டின் வளரச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும்.

 

 ஜிடிபி

ஜிடிபி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரியாகத் திட்டமிடாமல் தாக்கல் செய்யப்பட்ட உள்ள பட்ஜெட் அறிக்கை நாட்டின் ஜிடிபி அளவுகளை நேரடியாகப் பாதிக்காவிட்டாலும், வேலைவாய்ப்புகள் சரிவு, ஊழியர்கள் பணிநீக்கம், நுகர்வோர் சந்தை சரிவு, இந்திய மக்களின் தினசரி வருவாய் அளவுகள் பாதிப்பு என நாட்டின் வளர்ச்சி காரணிகளை அதிகளவில் பாதிக்கும் என்பதே உண்மை.

பெருமையான விஷயம்

பெருமையான விஷயம்

மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் வரி வருமானம் மத்திய அரசின் இலக்கு தாண்டிய வருமானம் கிடைக்கும். 2016-17ஆம் ஆண்டில் மத்திய அரசுக்குக் கிடைத்த ஒரே நல்ல விஷயம் இதுவே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+