குஜராத் மாநில ராஜ்கேட் தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு கூட்டுறவு வங்கி முறைகேடான பரிமாற்றத்தின் வாயிலாகச் சுமார் 871 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தில் இருக்கும் இவ்வங்கி செய்த ஊழல் தான் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் வருமான வரி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய 'ஊழல்'.
வருமான வரித்துறை
நவம்பர் 8ஆம் தேதி அதாவது பிரதமர் இந்தியாவின் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தக்கூடாது என அறிவித்த பின் வருமான வரித்துறையினர் இந்தியா முழுவதிலும் இருக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், சிறு வங்கிகள், பணப் பரிமாற்ற தளங்கள் எனப் பணப் பரிமாற்றங்கள் வரை அனைத்தையும் கண்காணித்து வருகிறது.
ஊழல் செய்தது எப்படி..?
இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ராஜ்கோட்-ஐ தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் கூட்டுறவு வங்கி செய்த முறைகேடான பணப் பரிமாற்றங்கள் செய்துள்ளதை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
871 கோடி ரூபாய்
நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் இந்தக் கூட்டுறவு வங்கியின் சுமார் 4,500 புதிய வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது. இதில் 60க்கு மேற்பட்ட கணக்குகள் ஒரே மொபைல் எண் மூலம் ஆக்டிவேட் செய்யப்பட்டுச் சுமார் 871 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது இந்த வங்கி.
அகமதாபாத் வரி துறையினர்
இந்நிலையில் அகமதாபாத் வரி துறையினர் இவ்வங்கியின் மீது வழக்குப் பதிவு செய்து, பல முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. மேலும் ஆரம்பர கட்ட விசாரணை மற்றும் ஆய்வுகளிலேயே பல முறையற்ற பணப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வைப்பு நிதிகள்
இக்கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்டுள்ள 871 கோடி ரூபாய் ஊழலில் பெரும் பகுதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் நவம்பர் 8 முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சுமார் 108 கோடி ரூபாய் திருப்பப்பெறப்பட்டுள்ளது.
2015 உடன் ஒப்பீடு
இந்நிலையில் தற்போது செய்துள்ள பணப் பரிமாற்றங்களை 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இதனை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ள அகமதாபாத் வருமான வரி துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அதிகப்படியான வைப்பு நிதி
இவ்வங்கியில் அதிக மதிப்புடைய வைப்பு நிதியாக 30 கோடி ரூபாய் அளவில் 10க்கும் மேற்பட்ட வைப்புகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கணக்கிற்கான KYC படிவத்தில் மிகவும் குறைந்த அளவிலான தகவல்கள் மட்டுமே உள்ளது.
பெயர் தெரியாத கணக்குகள்
மேலும் இந்த 50 நாட்கள் காலத்தில் இந்த வங்கியில் பெயர் தெரியாத கணக்குகளில் சுமார் 10 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் நிறுவனம்
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு பெட்ரோல் நிறுவனமும் இக்கூட்டுறவு வங்கியில் 2.53 கோடி ரூபாய் வைப்பு செய்துள்ளது.
5000 கணக்குகள்
இந்த ஆண்டில் மட்டும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுமார் 5000 வங்கிக் கணக்குகள் இந்தக் கூட்டுறவு வங்கிகளில் திறக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக இதில் ஏந்தொரு கணக்கிற்கும் பான் எண் இணைக்கப்படவில்லை.
முன்னாள் தலைவர்
இவ்வங்கியின் முன்னாள் தலைவரின் மகன் கணக்கில் 30 வங்கி கணக்குகளில் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வங்கியின் துணை தலைவரின் மனைவி கணக்கில் 64 லட்சம் ரூபாய் வைப்பு செய்யப்பட்டு அவை அப்படியே ஒரு நகை கடை உரிமையாளரின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் நடந்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த 50 நாட்களில் தான்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications