முன்பு இருந்த செயலியை விட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் வேகமாக டிக்கெட்களை புக் செய்யலாம் என்றும் கூறப்படுகின்றது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி நிறுவனம் விரைவில் புதிய டிக்கெட் செயலையை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் முன்பு இருந்த செயலியை விட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் வேகமாக டிக்கெட்களை புக் செய்யலாம் என்றும் கூறப்படுகின்றது.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த செயலியின் பெயரை முன்பு இருந்து ஐஆர்சிடிசி கணெக்ட் என்ற பெயரை மாற்றி ஐஆர்சிடிசி ரெயில் கணெக்ட் என்று வெளியிடுகின்றனர் என்று மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐஆர்சிடிசி ரயில் கணெக்ட்
இணையதள புக்கிங் மூலம் ரயில் டிக்கெட்கள் விற்பதை நிர்வகிக்கும் ஐஆர்சிடிசி நிறுவனம் புதிய ஐஆர்சிடிசி ரயில் கணெக்ட் செயலியை ஒரு வாரத்தில் வெளியிடும் என்றும் இதன் மூலம் இன்னும் பல பயனர்கள் டிக்கெட்கள் புக் செய்வார்கள் என்றும் வேகமாகவும் புக் செய்யலாம் என்றும் கூறுகின்றனர்.
இணையளத்துடன் ஒன்றிணைப்பு
இப்போது இருக்கும் செயலியில் இணையதள டிக்கெட் புக்கிங் சேவையுடன் இணைக்கப்படாமல் இருக்கின்றது என்றும் புதிய செயலியில் இணையதள சர்வர்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
பயணங்கள் பற்றிய நினைவூட்டல்
பயணிகள் தொடர்ந்து ரயில்களைத் தேடலாம், டிக்கெட்கள் புக் செய்யலாம், ஏற்கனேவே புக் செய்துள்ள டிக்கெட்களை ரத்து செய்யலாம் மற்றும் செய்யவிருக்கும் பயணங்கள் பற்றிய நினைவூட்டல்களையும் புதிய செயலியில் பெறலாம்.
பயணிகள் விவரங்கள்
ஐஆர்சிடிசி புதிய செயலியில் நீங்கள் அன்மையில் புக் செய்த பயணிகளின் விவரங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் என்றும் ஒவ்வொரு முறையும் பயணிகளின் விவரங்களை உள்ளிடத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.
ஐஆர்சிடிசி செயலியில் உள்ள சிக்கல்
ரயில் டிக்கெட் புக் செய்யும் போது தட்கல் ரயில் டிக்கெட்களை காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை புக் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications