மீண்டும் சரிவை சந்தித்தது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு..!
ரூபாயின் மதிப்பு இன்று காலை மீண்டும் 24 பைசா சரிந்து 68.20 ரூபாயை அடைந்தது.
வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்திருப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை மீண்டும் 24 பைசா சரிந்து 68.20 ரூபாயை அடைந்தது.

வெள்ளிக்கிழமை 67.96 ரூபாயாக இருந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு உலகளவில் பிற நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு வலிமையாக உள்ளதால் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதே நேரம் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிவில் முடிவுற்றது.
இன்று(09/01/2016) மாலை 6 மணி நிலவரத்தின் படி ரூபாயின் மதிப்பு 68.38 டாலர்களாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications