35% வேலைவாய்ப்புகளை இழந்தது 'இந்தியா'.. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் 'மோடி'..!

ஒரேயொரு அறிவிப்பால் நாட்டையே சீர்குலைத்துவிட்டார் மோடி. பணமதிப்பிழப்பு அறிவித்து 60 நாட்கள் ஆகியும் வர்த்தக சந்தை இன்னும் அதன் பாதிப்பில் இருந்து வெளியேறவில்லை. இதில் வேலைவாயப்பு சரிவு மிகப்பெரியதாக..

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 60 நாட்கள் முழுமையாக முடிந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் இன்றளவும் மோடியின் இந்தச் செயல் குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

உண்மையில் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியா தோல்வியா என்று விவாதம் செய்யும் முன்பு, கொஞ்சம் இதைப் படிங்க.

 வெற்றியா..? தோல்வியா..?

வெற்றியா..? தோல்வியா..?

நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கருப்பு பணத்தையும், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும் இந்திய சந்தையில் சுமார் 84 சதவீதம் அளவிற்குப் பணப் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்கு மக்கள் பல வழிகளில் சரமங்களைச் சந்தித்தாலும், நாட்டின் நலனுக்காகத் தாங்கிக்கொண்டாலும், அடுத்தச் சில நாட்களில் மோடி நடவடிக்கையின் கோரம் வெளியாகத் துவங்கியது.

 

அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு

அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு

அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பான AIMO நடத்திய ஆய்வில் சிறு தொழிற்சாலை துறையில் மட்டும் 35 சதவீத வேலைவாய்ப்புகள் இழந்துள்ளது, அதுமட்டும் அல்லாமல் 50 சதவீத வருவாய் சரிவை சந்தித்துள்ளது.

SME பிரிவில் இதன் அளவு இன்னமும் மோசமாக இருப்பது AIMO செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவை அனைத்திற்கும் பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் காரணம்.

 

 

மார்ச் 2017

மார்ச் 2017

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யப்பட்டதால், மார்ச் காலாண்டில் முடிவில் சந்தையில் சுமார் 60 சதவீத வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் வருவாயில் 55 சதவீத இழப்பைச் சந்திக்க நேரிடும் சூழல் உருவாகும் என AIMO அமைப்பின் ஆய்வுகள் எச்சரித்துள்ளது.

இவை அனைத்தையும் மூடி மறைக்கும் விதத்தில் தான் மத்திய பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதியே தாக்கல் செய்யப்படுகிறது.

 

 

34 நாட்கள்

34 நாட்கள்

500 மற்றும் 1000 ரூபாய் தடை விதிக்கப்பட்ட முதல் 34 நாட்களில் என்ன நடந்தது.

1. சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளில், குறிப்பாக இன்பாரஸ்டக்சர் துறையில் இருக்கும் நிறுவனங்கள் 35 சதவீத வேலைவாய்ப்பு இழப்பையும், 45 சதவீத வருவாய் இழப்பையும் சந்தித்துள்ளது.

2. ஏற்றுமதி துறையில் இருக்கும் நிறுவனங்களில் 30 சதவீத வேலைவாய்ப்பு இழப்பு, 40 சதவீத வருவாய் இழப்பு.

3. உற்பத்தித் துறையில் இருக்கும் நிறுவனங்களில் 20 சதவீத வருவாய் இழப்பு. இங்கு அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படவில்லை. காரணம் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் முன்பு பெற்ற ஆர்டர்களுக்காக இயங்கி வந்தது.

 

கணிப்புகள்

கணிப்புகள்

மத்திய பட்ஜெட் 2017 அறிக்கையில் தாக்கலுக்குப் பின் வெளியாக உள்ள மார்ச் மாத காலாண்டு அறிக்கையில் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் 40 சதவீத வருவாய் இழப்பைச் சந்தித்திருக்கும்.

இதுவே ஏற்றுமதி துறையில் 45 சதவீதமும், உற்பத்தித் துறையில் 15 சதவீதம் அளவிற்கு வருவாய் சரிவை சந்தித்திருக்கும்.

 

எதிரொலிகள்

எதிரொலிகள்

வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் இழப்பைத் தாண்டி, மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் தடை நாட்டை எப்படியெல்லாம் பாதித்தது தெரியுமா உங்களுக்கு..?

1. பணப் புழக்கத்தில் முற்றுப்புள்ளி
2. ஏடிஎம், வங்கிகளில் பணத்தை எடுக்கத் தடை
3. ஊழியர்கள் தொடர் விடுப்பு அல்லது பணிநீக்கம்
4. ரூபாய் மதிப்பில் தொடர் வீழ்ச்சி
5. நிதி திரட்டுவதில் முட்டுக்கட்டை
6. புதிய கடன் திட்டத்தை ஏற்க முடியாத நிலையில் வங்கிகள்
7. ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி பாதிப்பு
8. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் மத்தியில் பதற்றம்
9. வருவாய் அளிக்கும் எந்தச் செயலையும் செய்ய முடியாத நிலை
10. ஜிஎஸ்டி அமலாக்கத்தில் தொய்வு

 

3 லட்சம் நிறுவனங்கள்

3 லட்சம் நிறுவனங்கள்

இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலை பிரிவுகளில் சுமார் 3 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இவை அனைத்தும் நாட்டின் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்கு அளித்து வருகிறது. இதில் விவசாயத் துறை சார்ந்த நிறுவனங்களும் அடக்கம்.

இப்பிரிவின் கீழ் இருக்கும் நிறுவனங்களின் வருவாய் அளவுகள் சராசரியாக 30 சதவீதம் வரை குறைந்தால் நாட்டின் வளர்ச்சியும் குறையும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை.

 

 

தமிழ்நாடு

தமிழ்நாடு

நாட்டின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வாயிலாக உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனங்கள் அதிகளவில் பாதித்துள்ளது என்று AIMO அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது.

உற்பத்தி பிஎம்ஐ

உற்பத்தி பிஎம்ஐ

மேலும் 2016ஆம் ஆண்டில் முதல் முறையாக நிக்கி இந்தியாவின் உற்பத்தி பிஎம்ஐ குறியீடு டிசம்பர் மாதத்தில் குறைந்துள்ளது.

இப்போ சொல்லுங்க

இப்போ சொல்லுங்க

மோடி செய்தது சரியா..? தவறா..?

உங்கள் கருத்தை பதிவு செய்ய https://goo.gl/iC7vJY

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+