பெங்களுரூ: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் 2016ஆம் ஆண்டில் பலவேறு சிக்கல்களுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள விழாக் காலங்களில் அதிகளவிலான தள்ளுபடிகளை வாரி வழங்கியது.
இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் 2016ஆம் நிதியாண்டில் சுமார் 2,300 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது. இதன் அடிப்படையில் இந்நிறுவனத்தின் பங்குமதிப்பை மோர்கன் ஸ்டான்லி தடாலடியாகக் குறைத்தது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பைப் பாதியாகக் குறைத்தது.
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மொத்த நிர்வாக அமைப்பையும், அதிகாரிகளையும் மாற்றியுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய டம்மியான பதவியில் அமர்த்திவிட்டு அவர்களின் வாய்யை அடைத்துள்ளனர்.
பன்சால் சகோதரர்கள்
2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் பங்கு மதிப்பில் ஏற்பட்ட சரிவை கண்டு கடுப்பான முதலீட்டாளர்கள், சச்சின் பன்சால் போலேவே பின்னி பன்சால் அவர்களையும் சீஇஓ பதவியில் இருந்து நீக்கிவிட்டு உயர் தலைவர் பதவியை அளித்துள்ளது.
இதன் மூலம் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகிய பிளிப்கார்ட் நிறுவனத்தின் இரு நிறுவனர்களையும் நேரடி நிர்வாகப் பணிகளில் இருந்து ஓரம்கட்டியுள்ளனர்
புதிய சிஇஓ
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் அமைப்பு கல்யான் கிருஷ்ணமூர்த்தி-ஐ பிளிப்கார்ட் நிறுவனத்தின் சிஇஓவாக நியமித்துள்ளனர்.
3 உயர் அதிகாரிகள் வெளியேற்றம்
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சப்ளை சையின் பிரிவான ஈகார்ட்-இன் தலைவர் சாய்கிரன் கிருஷ்ணமூர்த்தி, உயர் துணை தலைவர் சுரோஜித் சட்டர்ஜி இவர் பிராடெக்ட் பிரிவின் தலைவர், மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரியான சமர்தீப் சுபானந்த் ஆகியோர் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.
முக்கிய ஆதிகாரிகள்
2014 மற்றும் 2015ஆம் வருடத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் 2.6 பில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும் அதிகச் சம்பளத்தில் உலக நாடுகளில் இருக்கும் பல முக்கிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைப் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைத்தது.
இத்திட்டத்தில் கீழ் பிளிப்கார்ட் நிறுவனத்தில் சேர்ந்தவர்கள் தான் இந்த மூவர்.
என்ன காரணம்
இந்த மூன்று முக்கிய அதிகாரிகள் ராஜிநாமா செய்தார்களா அல்லது வெளியேற்றப்பட்டனரா என்ற கேள்வி எழும்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தை அணுகியபோது, இதுகுறித்து எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கல்யாண் கிருஷ்ணமூர்த்தி
இந்நிலையில் கல்யாண் கிருஷ்ணமூர்த்திப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சிஇஓவாக மட்டும் அல்லாமல் ஈகார்ட் நிறுவனத்தையும் மேற்கொள்ள உள்ளார்.
பின்னி பன்சால்
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் இதன் நிறுவனர்களின் ஒருவரான பின்னி பன்சால் தற்போது மொத்த நிறுவனங்களின் பொறுப்பை ஏற்கிறார் (Group CEO).
இதன் மூலம் பேமெண்ட் வர்த்தகமான போன்பே, மின்திரா, ஜபாங் ஆகியவற்றின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளார் பின்னி பன்சால்.
உயர் அதிகாரிகள் மாற்றம்
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நித்தின் சே தற்போது தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனுடன் அவர் ஈகார்ட் மற்றும் வாடிக்கையாளர் சேவையையும் கவனிக்க உள்ளார்.
சச்சின் பன்சால் மற்றும் முகேஷ் பன்சால்
கடந்த வருடம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான சச்சின் பன்சால் வர்த்தக இலக்கை எட்டாத காரணத்திற்காகச் சிஇஓ பதவியை இழந்து சேர்மன் பதவியைப் பெற்றார். இதன் பின் பின்னி பன்சால் சிஇஓ பதிவியில் நியமிக்கப்பட்டார்.
தற்போது பின்னி பன்சால் அவர்களும் நேரடி நிர்வாகப் பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது வருத்தமான செய்து.
முதலீட்டாளர்கள் ஆதிக்கம்
பிளிப்கார்ட் நிறுவனத்தில் கடந்த 5 வருடமாக நிறுவனர்களின் ஆதிக்கத்தை விடவும் முதலீட்டாளர்களின் ஆதிக்கம் அதிகளவில் தெரிகிறது. இதன் பின்னணியில் இருப்பது


Click it and Unblock the Notifications