டெல்லி: 2017ஆம் ஆண்டின் ஜனவரி 6ஆம் தேதி வரை இந்தியாவில் பணப்புழக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இதன் மூலம் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக நீங்கிவிட்டது, நாட்டில் இயல்பு நிலை திரும்பியது என்று கூறிவந்தது தற்போது பொய்யாகிப்போனது.
ஜனவரி 6ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலும் இந்தியாவில் பணப்புழக்கம் 4.3 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இந்தத் தொடர் சரிவிற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டு தான்.

பொதுவாகப் பணப்புழக்கம் என்பது வங்கிகள் மற்றும் மக்கள் மத்தியில் இருக்கும் பணத்தைக் கொண்டு கணக்கிடப்படும். டிசம்பர் 23ஆம் தேதியன்று பணப்புழக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டாலும், இதன் பின் தொடர் சரிவையே கண்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் சில்லறை வாங்க முடியாத காரணத்தால், நாட்டில் பணப்புழக்கம் அதிகளவில் குறைந்து காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications