சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனா 14.9 சதவீதமும், ரஷ்யா 15.5 சதவீதமும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து டிராஃபிக்கில் ரஷ்யா, சீனாவை மிஞ்சி முதல் இடத்தைப் பிடித்தது இந்தியா என்று சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துச் சங்கம் வெளியிட்ட அறிக்கை
சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் சென்ற ஆண்டு இருந்ததை விட இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் டிராஃபிக் நவம்பர் மாதம் வரை 22.3 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
பிற நாடுகள்
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனா 14.9 சதவீதமும், ரஷ்யா 15.5 சதவீதமும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நவம்பர் மாதம் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் டிராபிக் வளர்ச்சி 7.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
செல்லா ரூபாய் நோட்டுகள்
2016 நவம்பர் 8-ம் தேதி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும் டிசம்பர் மாதம் வரை விமான டிக்கெட் வாங்கப் பழைய ரூபாய் நோட்டுகளை அனுமதித்து இருந்ததால் டிக்கெட் விற்பனையில் பெரிதாக எந்தத் தாக்கமும் இல்லை என்று கூறப்படுகிறது.
உலக நாடுகளில் உள்நாட்டு விமான போக்குவரத்து துறையின் சதவீதம்
உலக நாடுகளின் மொத்த விமானப் பயனர்களுடன் ஒப்பிடும் போது உள்நாட்டுப் பயணங்களில் 15.3 சதவீதத்தை அமெரிக்காவும், 8.3 சதவீதத்தைச் சீனாவும், ரஷ்யா மற்றும் பிரேசில் 1.4 சதவீதமும், ஜப்பான் 1.2 சதவீதமும், இந்தியா 1.1 சதவீதமும், ஆஸ்திரேலியா 1 சதவீதமும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2017-ம் ஆண்டு எப்படி இருக்கும்
2016-ம் ஆண்டு எப்படி இந்திய விமான நிறுவனங்கள் அதிகச் சலுகை அளித்தனவோ அதே போன்று 2017-ம் ஆண்டுத் துவக்கம் முதல் பல ஆஃபர்களை விமான நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன. எனவே விமானப் போக்குவரத்தில் இந்தியா மேலும் ஒரு மயில் கல்லை பிடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


Click it and Unblock the Notifications