டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய சேர்மனாக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்..!

பல போராட்டங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் 90 நாட்டுகளுக்கு பின் டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழர் என்பதில் நாம் அனைவருக்கும் பெருமை.

டெல்லி: 149 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டிசிஎஸ்

டிசிஎஸ்

இவர் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆவர். தற்போது சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாகத் தற்போது தலைமை நிதியியல் அதிகாரியாக விளங்கும் ரஜேஷ் கோபிநாத் நியமிக்கப்பட உள்ளார்.

100 நிறுவனங்கள்

100 நிறுவனங்கள்

டாடா குழுமத்தில் கீழ் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிகளவிலான பங்குகளை வைத்துக்கொண்டு உள்ளது டாடா சன்ஸ்.

6 லட்சம் கோடி

6 லட்சம் கோடி

1868ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 103.51 பில்லியன் டாலர், அதாவது 6,80,000 கோடி ரூபாய்

டாடா சன்ஸ்

டாடா சன்ஸ்

இத்தகைய பெரும் நிறுவனத்தை அடக்கி ஆளும் நிறுவனம் தான் டாடா சன்ஸ். டாடா குழுமத்தின் ஆஸ்தான முதலீட்டாளர்கள் மற்றும் டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவிற்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனையில் டாடா சன்ஸ் சேர்மேனாக இருந்த சைரஸ் மிஸ்திரி இப்பதவியில் தடாலடியாக முதலீட்டாளர்களால் நீக்கப்பட்டார்.

சைரஸ் மிஸ்திரி

சைரஸ் மிஸ்திரி

இதன் டாடா மோட்டார்ஸ் முதல் டாடா ஏரோஸ்பேஸ் வரை அனைத்து நிறுவனங்களிலும் தலைமை பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். சில நிறுவனங்கள் மிஸ்திரிக்கு ஆதரவும் தெரிவித்தாலும், கடைசியில் சில ஆதரவுகளையும் இழந்தார்.

மேலும் டாடா குழுமத்தின் வர்த்தக ரகசியங்களையும் வெளியிட்டு டாடா குழுமத்தின் முதலீட்டாளர்கள் இவர் மீது வழக்கையும் தொடுத்துள்ளனர்.

 

ரத்தன் டாடா

ரத்தன் டாடா

சைர்ஸ் மிஸ்திரி வெளியேற்ற பின், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டார். இதன் பின் 90 நாட்களில் டாடா குழுமம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக என். சந்திரசேகரனை நியமித்துள்ளனர்.

 

 

168 சதவீத வளர்ச்சி

168 சதவீத வளர்ச்சி

என். சந்திரசேகரன் தலைமையில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 168 சதவீதம் வரை உயர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக டாடா குழுமமும் அடுத்த சில வருடங்களில் மிகப்பெரிய இடத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த தேர்வு

சிறந்த தேர்வு

மேலும் சந்திரசேகரன் தொழில்நுட்ப வல்லுனராக இருந்தாலும், நிறுவன மேலாண்மையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒருவர்.

பாராட்டு

பாராட்டு

இவரது தேர்வு குறித்து டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், கோட்டாக் மஹிந்திரா, டிவிஎஸ் என நாட்டின் அனைத்து முக்கிய தலைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+