நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2016ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் கணிப்புகளை உடைத்து 2.9 சதவீதம் அதிக லாபத்தை அடைந்துள்ளது.
2016ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டை ஒப்பிடுகையில் டிசம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாப அளவு 2.9 சதவீதம் அதிகரித்து 6,778 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த காலாண்டில் இதன் அளவு 6,586 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் லாப அளவு 1.5 சதவீதம் வரை குறையும் எனக் கணிப்புகள் வெளியான நிலையில் டிசிஎஸ் கணிப்புகளை உடைத்து 2.9 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் வருவாய் அளவும் 1.5 சதவீதம் வரை உயர்ந்து 29,735 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த காலாண்டில் 29,284 கோடி ரூபாயாக இருந்தது. அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் 0.3 சதவீதம் அதிகரித்து 4,387 கோடி ரூபாயாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வர்த்தக பிரிவான டிஜிட்டல் வர்த்தகம் 2016ஆம் ஆண்டில் 30.2 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் டிசம்பர் காலாண்டில் மொத்த வருவாயில் டிஜிட்டல் பிரிவின் வருவாய் மட்டும் 16.8 சதவீதம், செப்டம்பர் காலாண்டில் 16.1 சதவீதம், ஜூன் காலாண்டில் 15.9 சதவீதம். மேலும் எனர்ஜி மற்றும் யுடிலிட்டி பிரிவின் வருவாய் 5.8 சதவீதமும், ஹைடெக் பிரிவு 2.6 சதவீதமும், BFSI பிரிவு 2.1 சதவீத உயர்வு, உற்பத்தி துறை 2.1 சதவீதமும், ரீடைல் பிரிவு 1.9 சதவீத நிலையான வருவாய் உயர்வை பெற்றுள்ளது. டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 50 மில்லியன் டாலர் பிரிவில் 2 வாடிக்கையாளரையும், 10 மில்லியன் டாலர் பிரிவில் 5 வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. கடந்த 12 மாதங்களில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 11.3 சதவீதமாகும். கடந்க 5 காலாண்டுகளாக இதன் அளவு தொடர்ந்து குறைந்த வண்ணமாகவே உள்ளது. மேலும் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின் செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் அளித்த டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ சந்திரசேகரன், BFSI பாதிப்புகள் தற்போது தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் மூலம் இப்பிரிவின் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் செரிவித்தார். மேலும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதிவிக்கு போட்டிபோடும் முக்கிய அதிகாரிகள் பட்டியலில் சந்திரசேகரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாபம்
வருவாய்
டாலர் வருவாய்
டிஜிட்டல் வர்த்தகம்
பிற துறைகள்
வாடிக்கையாளர்
ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்
BFSI வலிமை
டாடா சன்ஸ்


Click it and Unblock the Notifications