2017இல் ஐடி நிறுவனங்களுக்கு வருகிறது புதிய பிரச்சனை..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி, இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது.

இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் ஐடி துறைக்கு 2017ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக அமையும் என்று அமெரிக்க வால் ஸ்டீரிட் ஆய்வு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விசா பிரச்சனை, அதிகக் கட்டணங்கள், மோசமான சேவை, ஆட்டோமேஷன், புதிய டெக்னாலஜியில் மாற்றம், அனைத்திற்கும் மேலாக டிரம்ப் குறிக்கோள்கள் என உலக நாடுகளில் இந்திய ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் இந்திய சந்தையிலேயே புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி, இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது.

இந்நிலையில் அமெரிக்கச் சந்தையில் விசா பிரச்சனை, டொனால்டு டிரம்ப் முடிவுகள், புதிய ஊழியர்கள் நியமனம் ஆகியவற்றை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று குழப்பத்தில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அஸ்திவாரத்திலேயே பிரச்சனை கிளம்பியுள்ளது.

 

2017இல் சனி

2017இல் சனி

அமெரிக்க வால் ஸ்ட்ரீட் ஆலோசகரான டிரிப் சௌத்ரி 2017ஆம் ஆண்டில் ஐடி நிறுவனங்களின் பங்கு மதிப்பில் எவ்விதமான உயர்வு இருக்காது எனக் கூறுகிறார்.

2017ஆம் ஆண்டில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் நிலையாக அல்லது சரிவை மட்டுமே சந்திக்கும் உயர்வடைய ஒரு சதவீதம் கூட வாய்ப்புகள் இல்லை என ஆணித்தனமாகக் கூறுகிறார்.

 

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

மேலும் இதில் அதிகளவில் பாதிக்கப்படப்போவது இன்போசிஸ், விப்ரோ, காக்னிசென்ட் மற்றும் அக்சென்சர் ஆகிய நிறுவனங்களைக் கூறுகிறார் டிரிப் சௌத்ரி.

பங்குகள் விலை

பங்குகள் விலை

பங்குகள் விலை தானே என்று குறைவாக எடைபோட வேண்டாம். காரணம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி, வருவாய் அளவுகளைப் பொறுத்தே அந்நிறுவனத்தின் பங்கு விலை உயரவும், குறையவும் செய்யும்.

சங்கிலி தொடர்

சங்கிலி தொடர்

ஆனால் அனைத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. டொனால்ட் டிரம்ப் கூறுவது போல் அமெரிக்கர்கள் அல்லாதவர்களைப் பணியில் தூரத்திவிட்டாலோ, அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக வரி விதித்தாலோ அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் தானாகேவே இந்திய ஊழியர்கள் நாட்டிற்கு அனுப்பிவிடும்.

அப்படி அனுப்பிவிட்டால் ஐடி நிறுவனங்களின் செலவுகள் அதிகரிக்கும் (அமெரிக்கர்களுக்கு அதிகச் சம்பளம் அளிக்க வேண்டும்), புதிய ஆர்டர் கிடைப்பது கடினமாகும், இதனால் வருவாய் குறையும்.

வருவாய் குறைந்தால் நிறுவனத்தின் வளர்ச்சி குறையும், இப்படி இருக்கும் நிலையில் நிறுவனத்தில் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். நிறுவனத்தின் பணி நீக்கம் அதிகளவில் இருக்கும்போதும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிறுவனம் நம்பிக்கையை இழக்கும்.

இதன் வாயிலாக ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு தானாகக் குறையத் துவங்கும்.

 

புதிய டெக்னாலஜி

புதிய டெக்னாலஜி

உலக நாடுகளில் நிறுவனங்கள் தற்போது, கிளவுட், மொபைல், அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் என் புதிய டெக்னாலஜிகளை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கும் போது இந்திய நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய தடையாக உள்ளது.

சரி இந்திய நிறுவனங்களும் புதிய டெக்னாலஜிகளுக்கு மாறிவிட்டால் என்ன என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. சர்வதேச சந்தையில் பிஸ்னஸ் மாடல், அதாவது ஒரு வேலையை எப்படிச் செய்து முடிக்கப்படுகிறது, அதற்கான கட்டணம் எப்படியெல்லாம் வசூல் செய்யப்படுகிறது போன்றவற்றிலும் ஐடி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் பிஸ்னஸ் மாடல் 10 ஆண்டுகள் பழமையானது. இதனை மாற்றினால் நிறுவனத்தின் லாபம் குறைவது மட்டுமல்லாமல், ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும். இதனைக் காரணமாக வைத்தே மாற்றாமல் வைத்திருக்கிறது இந்திய ஐடி நிறுவனங்கள்.

 

பெரிய ஆர்டர்கள்

பெரிய ஆர்டர்கள்

மேலும் 2017ஆம் ஆண்டில் பெரிய ஆர்டர்கள் எனக் கூறப்படும் எதுவுமில்லை என்பதால் இந்திய ஐடி நிறுவனங்கள் மாற்றங்கள் ஏதும் நடக்கப்போவதில்லை என்று குலோபல் ஈக்விட்டி ஆய்வு நிறுவனத்தின் துணை நிறுவனரான டிரிப் சௌத்ரி கூறியுள்ளார்.

மேலும் டெக் துறையைப் பற்றிய இவரது கருத்துக்கள் பல சமயம் கேட்ட வேடிக்கையாக இருந்தாலும், ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்கள் குறித்து இவரின் ஆய்வு முடிவுகள் உண்மையானது.

 

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

மேலும் இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனமான இன்போசிஸ்-இன் சிஇஓ விஷால் சிக்கா பல மாதங்கள் முன்பே, "இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கண்டிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி ஒரு நாள் முழுமையாகத் தடைப்படும்" எனக் கூறினார்.

இவர் இந்திய ஐடி துறைக்கு வந்த சில வருடங்கள் மட்டுமே ஆகிறது. சிக்கா இதற்கு முன் ஜெர்மன் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான SAP நிறுவனத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் இருந்தார்.

ஆதலால் இவருக்கு வெளிநாட்டு மற்றும் இந்தியா சந்தையில் உள்ள வித்தியாசங்கள் தெரியும்.

 

டிசிஎஸ்

டிசிஎஸ்

மேலும் டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவுகள் கூட அதிகளவிலான மாற்றம் இருக்காது என ஆய்வுகள் கூறுகிறது.

இந்திய ஐடி துறையின் வர்த்தகத்தின் முதன்மை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ்-இன் லாபம் மந்தமாக இருந்தால், இன்போசிஸ், விப்ரோ, போன்ற பிற நிறுவனங்களின் லாபத்திலும் பாதிப்புகள் இருக்கும்.

 

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்திய ஐடி துறையில் முதலீடு செய்யும் முன் சந்தை நிலவரங்கள் மற்றும் அதன் வளர்ச்சி வாய்ப்புகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் முதலீடு செய்யவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+