இந்திய மீது நம்பிக்கை இழக்காத 'உலக வங்கி'.. பொருளாதார வளர்ச்சியை 7% ஆக குறைத்தது..!

இந்திய பொருளாதாரம் 2016-17ஆம் ஆண்டில் 7.6 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என சில மாதங்களுக்கு முன்பு உலக வங்கி தனது கணிப்புகளை வெளியிட்ட நிலையில், மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக தற்போது வளர்ச்சி அளவை 7 சதவீதமாக குறைத்துள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

இதுக்குறித்து அறிவிப்பை புதன் வெளியிட்ட உலக வங்கி தனது அறிக்கையில் 2016-17ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7 சதவீதமாக குறைந்தாலும், அடுத்த வரும் ஆண்டுகளில் அளவுகள் 7.6, 7.8 சதவீதம் வரை உயரும் எனவும் தனது கணிப்புகளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

இவ்வறிக்கையில், இந்தியாவில் 84 சதவீதம் பணபுழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்துவிட்டு, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்பாட்டுக்கு அளித்துள்ளது இந்திய அரசு. இதன் காரணமாகவே 2016ஆம் நிதியாண்டில் இந்தியா நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் விவசாயம்

கச்சா எண்ணெய் மற்றும் விவசாயம்

மார்ச் 2017ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் டிசம்பர் 2016இல் நாட்டின் வளர்ச்சி வளர்ச்சி பாதையில் மட்டுமே உள்ளது. இதற்கு அடிப்படை காரணமாக விளங்கியது குறைவான கச்சா எண்ணெய் விலை மற்றும் நிலையான விவசாய துறை உற்பத்தி ஆகும்.

சீனா

சீனா

இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வளரும் சந்தைகள் மத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதன்மையான இடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது என உலக வங்கி கூறியுள்ளது.

தொடர் வளர்ச்சி

தொடர் வளர்ச்சி

2018ஆம் நிதியாண்டிற்குள் இந்திய பொருளாதாரம் 7.6 சதவீதம் வரையிலும், 2019-20 நிதியாண்டில் 7.8 சதவீதம் வரையில் உயரும் என உலக வங்கி தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

முதலீடு அவசியம்

முதலீடு அவசியம்

இந்த வளர்ச்சி அளவுகளை அடைய, இந்தியா நாட்டின் உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு அதிகப்படியான முதலீடு செய்ய வேண்டும். இவை வர்த்தக சந்தைக்கு மிகவும் சாதமாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்திய உற்பத்தி துறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை அளித்துள்ளது, அதேபோல் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இந்தியாவின் நுகர்வோர் சந்தையை விரிவாக்கம் அடைய மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு பருவமழை மற்றும் விவசாய துறையின் உற்பத்தி சாதகமாக அமையும்.

தடைகள்

தடைகள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வீட்டு செலவுகளை அதிகளவில் பாதித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் இந்திய அரசின் முக்கிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தடைப்பெற்றுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவீடுகளை அதிகளவில் பாதிக்கும், ஆனால் இவை குறுகியகால பாதிப்புகள் மட்டுமே.

நேபாளம், பூட்டான்

நேபாளம், பூட்டான்

மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்தியா- நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் மத்தியிலான வர்த்தகம் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் நேபாளம், பூட்டான் நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரமும் பாதித்துள்ளது. (இந்தியாவை விட நேபாளம், பூட்டான் பொருளாதார ரீதியில் மிக சிறிய நாடுகள்)

ஏற்றுமதி சரிவு

ஏற்றுமதி சரிவு

2016-17ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வளர்ச்சி தனியார் மற்றும் பொத்துறைகளின் அதீத ஆதிக்கத்தில் நடந்தவை. இக்காலகட்டத்தில் முதலீட்டு அளவுகள் அதிகளவில் குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழிற்துறை வளர்ச்சியும் சரி, ஏற்றுமதி அளவுகளும் சரி மிகவும் குறைவு.

இந்தியாவின் வளர்ச்சி சிறப்பு

இந்தியாவின் வளர்ச்சி சிறப்பு

டிசம்பர் மாத முடிவிலும், தொழிற்துறை உற்பத்தி மற்றும் சேவை துறையின் வளர்ச்சி மந்தமாக இருக்கும் நிலையில் 2017ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டிலும் குறைவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது உலக வங்கி. இத்தகைய மோசமான சூழ்நிலையிலும் நாட்டின் வளர்ச்சி 7.0 சதவீதமாக இருக்கும் என இந்திய பொருளாதாரச் சந்தையைக் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளது உலக வங்கி.

முதலீடுகள்

முதலீடுகள்

2016ஆம் ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடுகள் 21 சதவீதம் உயர்ந்த நிலையில் தனியார் நிறுவனங்களின் முதலீடு 1.4 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த முதலீட்டு அளவுகள் வெறும் 4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

1 டிரில்லியன் டாலர்

1 டிரில்லியன் டாலர்

மேலும் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் தேவை அதிகரித்துள்ளதால் 12 வருடத் திட்டத்தின் கீழ் சுமார் 1 டிரில்லியன் டாலர் நிதி தேவைப்படுகிறது. இதனுடன் மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து பல முக்கியச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாக உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+