சமுக வலைத் தளங்களில் ஜனவரி 15-ம் தேதிக்குப் பிறகு பேடிஎம் செயலி வேலை செய்யாது என்று வதந்தி பரவியது. ஆனால் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று பேடிஎம் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இரண்டு நாட்களில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி துவங்க உள்ள நிலையில் 160 மில்லியன் பேடிஎம் வாலெட்டில் உள்ள பணமும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் என்று பேடிஎம் கூறியுள்ளது.
சமுக வலைத் தளங்களில் ஜனவரி 15-ம் தேதிக்குப் பிறகு பேடிஎம் செயலி வேலை செய்யாது என்று வதந்தி பரவியது. ஆனால் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று பேடிஎம் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பேடிஎம் வாலெட்டில் உள்ள பணம் என்னவாகும்..?
ஜனவரி 15-ம் தேதிக்குப் பிறகு ஒன்97 கம்யூனிகேஷன் கீழ் உள்ள பேடிஎம் செயலி மற்றும் வாலெட்டில் உள்ள பணம் அனைத்தும் பேடிஎம் பேமெண்ட்ஸ் பாங்க் நிறுவனத்திற்கு மாற்றப்படு.
வலெட்டில் உள்ள தொகைக்கு எந்த சிக்கலும் இல்லை
இந்த மாற்றத்தால் வாலெட்டில் உள்ள தொகையில் எந்த மாற்றமும் இருக்காது. இப்போது உங்கள் பேடிஎம் வாலெட்டில் 1000 ரூபாய் உள்ளது என்றால் அது அப்படியே பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு மற்றும் வாலெட்டில் வரை வைக்கப்படும்.
பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு மாற்றப்படாத கணக்குகள்
6 மாதங்களுக்கு மேலாகச் செயல்படாமல் பூஜ்ஜியம் பேலன்ஸ் வைத்துள்ள பேடிஎம் வாலெட்டுகள் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு மாற்றப்படமாட்டாது.
பேடிஎம் வாலெட்டில் பணம் வைத்துள்ளவர்கள் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 2016 டிசம்பர் 6-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் வழிகாட்டுதலின் படி வாலெட்டில் உள்ள பணம் அனைத்தும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் என்று குறிப்பிட்டு இருந்தது.
பேடிஎம் வாலெட்டுகள்
ஜனவரி 15-ம் தேதிக்கு பிறகும் பேடிஎம் வாலெட்டுகள் தொடர்ந்து வேலை செய்யும். பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் உள்நுழையப் பழைய லாகின் விவரங்களே போதுமானது. இப்போது பேடிஎம் செயலியில் உள்ள அனைத்து வசதிகளும் அப்படியே தொடரும் என்று பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது.
புதிய வங்கி கணக்கு
பேடிஎம் வல்லெட்டில் பணம் வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் எளிதாகப் புதிய வங்கி கணக்கு ஒன்று கிடைக்கின்றது. பேமெண்ட்ஸ் வங்கி துவங்கப்பட்ட உடன் தனியாக வங்கி கணக்கை துவங்குவதற்கான அறிவிப்புகளைப் பெறுவர் என்றும் பேடிஎம் நிறுவனம் கூறிவருகின்றது.
அடையாள ஆவணங்கள்
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கை துவங்க ஆதார் எண் மற்றும் பாண் குறியீடு போன்றவற்றை அடையாளா ஆவணங்களாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
பேடிஎம்-ஏர்டெல்
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் சேமிப்புக் கணக்கை துவங்குபவர்களுக்கு அதிரடியாக 7.25 சதவீத வட்டி விகிதத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் பேடிஎம் நிறுவனம் இப்போது வரை எவ்வளவு வட்டி விகிதம் அளிக்க இருக்கின்றது என்ற விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications