நடுத்தர மக்களை குறிவைத்து வீட்டு கடன் திட்டத்தில் புதிய சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் மத்திய அரசுக்கும் லாபம் உண்டு - பட்ஜெட் 2017.
மத்திய அரசு நவம்பர் 8ஆம் தேதி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்திய ரியல் எஸ்டேட் துறைமிகப்பெரிய அளவிலான பாதிப்பை அடைந்ததுள்ளது. இதனால பொருளாதார வளர்ச்சியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த பாதிப்புகளை தீர்க்கும் வகையிலும், அனைவருக்கும் வீட்டு கிடைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் மத்திய அரசு ரியல் எஸ்டேட் துறையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர மத்திய பட்ஜெட் 2017-18 இல் வீட்டுக் கடனுக்கு அதிகளவிலான வரி சலுகைகளை அளிக்க உள்ளதாக தெரிகிறது.
நடுத்தர மக்கள்
மாத சம்பளக்காரர்களுக்கும், வருமான வரி செலுத்துவோரை மையமாக வைத்து, உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய சலுகை திட்டத்தில், வீட்டுக் கடனில் வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வட்டியை செலுத்துவோருக்கும் மட்டும் இந்த வரி சலுகை கிடைக்கும் வரையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தக சந்தையையும் விரிவாக்கம் செய்ய வட்டியை தொடர்ந்து குறைத்து வந்தாலும், வணிக வங்கிகள் வட்டியை குறைத்தப்படாடு இல்லை.
வாய்ப்புகள்
வங்கிகளில் தற்போது வைப்பு நிதிகளில் அதிகளவிலான பண வைப்பு செய்யப்பட்டுள்ளதை பயன்படுத்து வங்கி கடன் வர்த்தகத்தை உயரத்துவதோடு, நாட்டின் ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் வீட்டுக் கடனுக்கு அதிக வரி சலுகையை அளிக்க முடிவு செய்யதுள்ளது.
முயற்சிகள்
ஏற்கனவே பல அரசுகள் வீட்டு கடன் திட்டத்தில் பல சலுகைகளை அளித்தும் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி இத்துறையில் பார்க்க முடிவில்லை. இந்நிலையில் மோடி அரசின் இத்திட்டம் நடுத்தர மக்களை நேரடியாக கொண்டு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ள காரணத்தால், அடுத்த சில வருங்களில் இந்திய ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக வாய்ப்பு
மேலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அதிகளவிலான கடனில் சிக்கியுள்ளது, இதனுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் ரியல் எஸ்டேட் வர்த்தகம் வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ள நிலையில், வீட்டு மற்றும் வீட்டு மனைகளின் விலையும் அதிகளவில் குறையவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications