
கவின்பாரதி மிட்டல் வயது 29
யார் இவர்:
ஹைக் மெசெஞ்சர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ
விருப்பம்:
கிரிக்கெட், டென்னிஸ் மற்றும் பார்முலா ஒன் ப்ரியர். லண்டன் ரேசில் கலந்து கொள்பவர்
இவரது சிறப்பு:
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனர் சுனில் மிட்டல் அவர்களின் புதல்வர் தான் கவின் பாரதி மிட்டல். சாப்ட்வேர் எஞ்சினியர் மற்றும் தொழிலதிபராக இவர் கடந்த 2012ஆம் ஆண்டு மொபைல் மெசெஞ்சரான ஹைக் மெசெஞ்சரை நிறுவினார்.
இன்று இந்த மெசெஞ்சர் உலகில் ஆறாவது மிகப்பெரிய மொபைல் மெசேஞ்சிங் அப்ளிகேசனாக உள்ளது. 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த மெசேஞ்சிங் அப்ளிகேசனுக்கு உள்ளனர். இவர்களில் 90% வாடிக்கையாளர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுடோகு, பஸ்ஸில் உட்படப் பலவிதமான கேம்ஸ்களும் இந்த ஹைக் மெசெஞ்சரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டென்செண்ட் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களில் இந்நிறுவனம் $175 மில்லியன் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications