ஐடி துறையில் சிறந்த வேலை என்றால் 'இது'தான்..!

அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தேடுதல் தளமான "கெரியர்காஸ்ட்" சமீபத்தில் 2016 ஆம் ஆண்டின் சிறந்த பத்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் வேலைகளை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல், சந்தையில் இருக்கும் சம்பள அளவுகள், வளர்ச்சி அளவுகள். அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் சிறந்த ஆறு தகவல் தொழில்நுட்பத்துறை வேலைகளை மட்டும் பார்ப்போம்.

1.தகவல்கள் அறியும் விஞ்ஞானி: (Data Scientist)

1.தகவல்கள் அறியும் விஞ்ஞானி: (Data Scientist)

இந்த வரிசையில் முதலில் வருவது தகவல்களை அறியும் விஞ்ஞானி ஆகும்.

கெரியர்காஸ்ட் இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தகவல்களை பகுப்பாயும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் வரும் 2024ல் தகவல்களை அறியும் விஞ்ஞானிகளின் வளர்ச்சி 16 சதவிதமாக உயர்ந்துள்ளது.

பல்வேறு வகையான பெரும் தொழில்நிறுவனங்கள் தகவல்களை பகுப்பாயும் வேலைகளான நிதி, மார்க்கெட்டிங், கல்வி, சுகாதாரம் மற்றும் சில்லறை தொழில்களுக்கு தகவல்கள் அறியும் விஞ்ஞானிகளையே நியமிக்கின்றனர். இந்த வேலைக்கான வருடாந்த சராசரி சம்பளம் $128,240 டாலர்களாகும்.

 

2.தகவல் பாதுகாப்பு ஆய்வாளர் :

2.தகவல் பாதுகாப்பு ஆய்வாளர் :

இது இரண்டாவது இடத்தில் உள்ளது. குலௌடுசார்ந்தசேமிப்பின் வளர்ச்சி வெடிப்பால் தகவல் பாதுகாப்பு ஆய்வாளர்களின் வளர்ச்சி 18 சதவிதமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை சொல்கிறது.

இந்த வேலைக்கான வருடாந்த சராசரி சம்பளம் $90,120 டாலர்களாகும்.

 

3.மென்பொருள் பொறியாளர் :

3.மென்பொருள் பொறியாளர் :

மூன்றாவதாக மென்பொருள் பொறியாளர்.இந்த பொறியாளர்களின் வளர்ச்சி 17 சதவிதமாக உயர்ந்துள்ளதோடு இவர்களின் வருடாந்த சராசரி சம்பளம் $100,690 டாலர்களாகும்.

4. கணினி அமைப்புகள் ஆய்வாளர் :

4. கணினி அமைப்புகள் ஆய்வாளர் :

நான்காவது இடத்தில் கணினி அமைப்புகள் ஆய்வாளர்.இந்த ஆய்வாளர்களின் வளர்ச்சி 21 சதவிதமாக உயர்ந்துள்ளது.

இவர்களின் வருடாந்த சராசரி சம்பளம் $85,800 டாலர்களாகும்.

 

5. நெட்வொர்க் மற்றும் கணினி அமைப்பின் நிர்வாகி:

5. நெட்வொர்க் மற்றும் கணினி அமைப்பின் நிர்வாகி:

நெட்வொர்க் மற்றும் கணினி அமைப்பின் நிர்வாகி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த நிர்வாகியின் வளர்ச்சி 8 சதவிதமாக உயர்ந்துள்ளது. இவர்களின் வருடாந்த சராசரி சம்பளம் $77,810 டாலர்களாகும்.

6.வலை மேம்பாட்டாளர்கள்:

6.வலை மேம்பாட்டாளர்கள்:

கடைசியாக மற்றும் அதிக தேவையானவர்களாக வலை மேம்பாட்டாளர்கள் உள்ளார்கள். 2024 ல் இந்த வலை மேம்பாட்டாளர்களின் வளர்ச்சி 27 சதவிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் வருடாந்த சராசரி சம்பளம் $64970 டாலர்களாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+