உலக வங்கி இந்திய வளர்ச்சி மீது அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளது, சீனாவிட அதிகளவில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் இந்திய சந்தையில் உருவாகி இருக்கும் இந்தச் சூழ்நிலையில், வேலைவாய்ப்பு என்ற ஒரு விஷயம் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
2017இல் இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 1 லட்சம் பேரும், 2018ஆம் ஆண்டு 2 லட்சம் பேர் அதிகரிக்க உள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
கணிப்புகளும்.. அதிர்வுகளும்..
உலக வங்கி ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரத்தை ஆய்வு செய்வதைப் போன்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பும் ஒவ்வொரு நாட்டிலும் வேலைவாய்ப்பு சந்தை குறித்து ஆய்வு செய்யும்.
இந்த வகையில் இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 1 லட்சம் பேரும், 2018ஆம் ஆண்டு 2 லட்சம் பேரும் அதிகரிக்க உள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில் 17.7 மில்லியனாக இருந்த நிலையில் 2018ஆம் ஆண்டு 18 மில்லியன் வரை உயர உள்ளதாகத் தனது ஆய்வின் கணிப்புகளை வெளியிட்டு இந்திய சந்தையை உலக நாடுகள் கவணிக்க வைத்துள்ளது.
விகிதம்
மேலும் இந்தியாவில் வேலையில்லாதோர் அளவீடுகள் 3.4 சதவீதத்தில் இருந்து 2017ஆம் ஆண்டு 3.5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளவில்
இந்தியாவில் 1 லட்சம் என்றால் 2017ஆம் ஆண்டில் உலக நாடுகளில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 3.4 மில்லியனாக உயர வாய்ப்புகள் உள்ளது என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய சந்தை குறித்த ஆய்வு நவம்பர் 2016ஆம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உண்மை
உலக நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்ந்து வருவது நாம் அனைவரும் பார்த்து வந்தாலும், குறைவான வேலைவாய்ப்புச் சந்தைகளுடன் உலகப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையைச் சந்தித்து வருகிறது.
தென் ஆசியா
மேலும் தற்போதைய கணிப்புகளின் மூலம் உலக நாடுகளில் வருடத்திற்கு 1கோடிக்கும் அதிகமானோர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்பட உள்ள பகுதிகள் தென் ஆசிய மற்றும் சாஹாரா ஆப்ரிக்கா பகுதிகள்.
வளர்ந்து வரும் நாடுகள்
மேலும் சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் 2 பேரில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகவே உள்ளது, மேலும் ஆமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் இதன் பாதிப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உயர் பொருளாதார வல்லுநர் மற்றும் தலைமை ஆசிரியரான ஸ்டீவன் தோபின் கூறியுள்ளார்.
200 ரூபாய் வருமானம்
மேலும் தினமும் 200 ரூபாய்க்கும் குறைவான வருமான உடையோர் எண்ணிக்கை அடுத்த 2 வருடத்தில் 50 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
ஆசிய சந்தை
உலகிலேயே அதிகளவில் வேலைவாய்ப்பை அளிப்பது ஆசிய பசிபிக் பகுதிகள் தான்.
உலகளவில் சுமார் 60 சதவீத வேலைவாய்ப்பு சந்தையைக் கொண்டுள்ளது ஆசிய பசிபிக் சந்தை.2016ஆம் ஆண்டில் வெறும் 20 மில்லியன் வேலைவாய்ப்புகளை மட்டுமே இச்சந்தை உருவாக்கியுள்ளது. 2017ஆம் ஆண்டில் இதன் அளவுகள் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக் கூறுகிறது.
இதில் இந்திய சந்தையும் அடக்கம்.
இந்திய சந்தை
ஆசிய சந்தை மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் ஆகிய இரு பட்டியலிலும் இந்தியா இடம்பெற்றுள்ளதால், 2017ஆம் ஆண்டில் இந்திய வேலைவாய்ப்பு சந்தைக்கு மிகப்பெரிய பாதிப்பு உருவாக உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு வர்த்தக நிறுவனங்கள் இயங்க வேண்டும். மேலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான பணிகளைச் செய்ய வேண்டும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications