மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதிதாகத் துவங்கிய டெலிகாம் வர்த்தகமான ஜியோ நிறுவனத்தில் ஏற்கனவே 1.7 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது புதிதாக 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார் முகேஷ் அம்பானி.
இப்புதிய முதலீட்டின் மூலம் அதிகளவிலான போட்டி நிலவும் இந்திய டெலிகாம் சந்தையில் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளார்.
செப்டம்பர் 5
ஜியோ நிறுவனம் மக்களுக்கு முழுமையான சேவையைச் செப்டம்பர் 5ஆம் தேதி அளிக்கத் துவங்கிய நிலையில், 2016ஆம் ஆண்டில் முடிவில் 7.24 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
முதலீடு
இப்புதிய முதலீட்டைத் தனது உரிமைகள் விற்பனை மூலம் திரட்டவும் அதனை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்யவும் ஜியோ நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
டிஜிட்டல் சேவைகள்
ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதன் வளர்ச்சிக்கும், நெர்வொர்க் மேம்பாடு மற்றும் அளவுகளை உயர்த்த இப்புதிய முதலீடு பயன்படுத்த திட்டமிட்டுள்ள ஜியோ.
2 லட்சம் கோடி
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி ஏற்கனவே 1.7 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து ஜியோ நிறுவனத்தைத் துவங்கிய நிலையில் தற்போது புதிதாகச் செய்யப்படும் 30,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் ஜியோ நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்
போட்டி மிகுந்த இந்திய டெலிகாம் துறையில் வாடிக்கையாளர்களைப் பெறுவது கடினம் என்பதை முன்கூடியே உணர்ந்த ஜியோ, துவக்கத்திலேயே வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் ஆகியவற்றை அளித்து வாடிக்கையாளர் எண்ணிக்கையை மளமளவென உயர்த்தியது.
இந்த இரு திட்டங்களிலும் அதிகளவிலான இலவசங்கள் இருப்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஜியோ.
அதிர்ச்சி
இந்திய சந்தையில் ஜியோ அறிமுகம் மற்றும் மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைக் கண்டு பார்தி ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தது.
தொடர் வளர்ச்சி
இந்நிலையில் தற்போது 30,000 மதிப்பிலான புதிய முதலீட்டுடன் ஜியோ நிறுவனம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சிடையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications