ஏடிஎம்-இல் இருந்து இனி 10,000 ரூபாய் எடுக்கலாம்: ஆர்பிஐ
4,500 ரூபாய் என்று மாற்றப்பட்டு இன்று முதல் 10,000 ரூபாய் எடுக்கலாம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. ஆனால் வாராந்திர அளவில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை அடுத்து ஏடிஎம்களில் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதுவரை வெறும் 4500 ரூபாய் வரை எடுக்கும் வகையில் இருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று முதல் 10,000 ரூபாய் எடுக்கலாம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. ஆனால் வாராந்திர அளவில் எந்த மாற்றமும் இல்லை. இதில் வாரத்திற்கு 24,000 ரூபாய் வரை வித்டிரா செய்யப்படும் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கும்.
நடப்பு வங்கி கணக்கில் இருந்து 50,000 ரூபாய் என்ற வரம் தளர்த்தப்பட்டு 1,00,000 ரூபாய் வரை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும் விவரங்களுக்குத் தொடர்ந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளத்தைத் தொடர்ந்து படிக்கவும் .


Click it and Unblock the Notifications