கச்சா எண்ணெய் முதல் டெலிகாம் வரையில் பல துறைகளில் வர்த்தகம் செய்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சந்தைக் கணிப்புகளையும் தாண்டி 10 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் லாபம் உயர்விற்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம்.
ரூ.8,022 கோடி லாபம்
அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் லாபம் 8,022 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதேக்காலக்கட்டத்தில் இதன் அளவு 7,296 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கணிப்புகள்
இக்காலாண்டில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் 7,850 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்தைக் கணிப்புகளை உடைந்து ரிலையன்ஸ் ரூ.8,022 கோடி லாபத்தைப் பெற்றுள்ளது.
வருவாய்
இக்குழுமத்தின் வருவாய் அளவு கடந்த வருடத்தை விடவும் 9 சதவீதம் அதிகமாகும். 2016ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் 9.8 பில்லியன் டாலர் வருவாயைப் பெற்றுள்ளது.
90 சதவீத லாபம் மற்றும் வருவாய்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் மற்றும் லாபத்தில் 90 சதவீதம் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தின் வாயிலாகக் கிடைக்கிறது.
10.8 டாலர்
சுத்திகரிப்பின் மூலம் ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு 10.8 டாலர் லாபம் கிடைப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications