ஏர் ஏசியாவின் இந்தச் சலுகையில் 2017 மே 1 முதல் 2018 பிப்ரவரி 6 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 2017 ஜனவரி 22-ம் தேதி வரை புக் செய்யலாம்.
பட்ஜெட் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் ஏசியா இந்தியா '2017 இயர்லி பேர்டு சேல்' என்ற பெயரில் 407 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
ஏர் ஏசியாவின் இந்தச் சலுகையில் 2017 மே 1 முதல் 2018 பிப்ரவரி 6 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 2017 ஜனவரி 22-ம் தேதி வரை புக் செய்யலாம்.
சலுகை உள்ள வழித்தடங்கள்
ஏர் ஏசியா அறிவித்துள்ள சலுகை விலையான 407 ரூபாயில் இம்பால்-கவுஹாத்தி வரை செல்லலாம்.
கோவா-ஹைதராபாத் செல்ல 877 ரூபாயும், ஹைதராபாத்-பெங்களூர் செல்ல 938 ரூபாயும், ஜெய்ப்பூர்-புனே செல்ல 2,516 ரூபாயும், புனேவில் இருந்து பெங்களூர் செல்ல 821 ரூபாய் எனவும், பெங்களுரில் இருந்து ஹைதராபாத் செல்ல 663 ரூபாய் எனவும் டிக்கெட் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற வழித்தடங்களுக்கு ஏர் ஏசியா இணையதளத்தைப் பார்க்கவும்.
போட்டி நிறுவனங்கள்
ஏர் ஏசியா நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான கோஏர், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ போன்ற விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஏற்கனவே தள்ளுபடி விலையில் டிக்கெட்களை அறிவித்துள்ளன.
விமானப் போக்குவரத்தின் டிராஃபிக்கில் இந்தியா வளர்ச்சி
சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் சென்ற ஆண்டு இருந்ததை விட இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் டிராஃபிக் நவம்பர் மாதம் வரை 22.3 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
பிற நாடுகள் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனா 14.9 சதவீதமும், ரஷ்யா 15.5 சதவீதமும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நவம்பர் மாதம் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் டிராபிக் வளர்ச்சி 7.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஸ்பைஸ் ஜெட்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் 22 பில்லியன் முதலீட்டில் உள்நாட்டுப் போக்குவரத்து சேவைக்காக 205 போயிங் விமானங்களை வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
வல்லுநர்கள்
100 கோடிக்கும் அதிகமாக உள்ள இந்திய மக்கள் தொகையில் 1.2 பில்லியன் மக்கள் மட்டுமே சென்ற ஆண்டு விமானப் போக்குவரத்தை பயன்படுத்தி உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications